உஷார் ஆணே உஷார்...

posted Oct 29, 2011, 8:51 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Oct 29, 2011, 8:51 AM ]
காதலில் ஆண்கள் தான் மோசமாக நடப்பார்கள் என்று எண்ண வேண்டாம். பெண்களிலும் அப்படிப்பட்டவர்கள் உண்டு. அதனால் எப்படிப்பட்ட பெண்களைக் கண்டதும் விலகுவது நல்லது என்பதைப் பார்க்கலாம்.

பணத்திற்காக எதையும் செய்பவள் எனத் தெரியவந்தால்...

உடல் ரீதியான தொடர்பு பல ஆண்களிடம் காதலுக்குப் பின்னரும் இருக்கிறது என அறிந்தால்...

பரிசுப் பொருளை பெறுவதற்காக சந்தித்து, பொருள் வாங்கியதும் விலகி ஓடுபவராக இருந்தால்...

நான் மட்டும் இல்லையென்றால், உங்களால் ஒண்ணும் செய்ய முடியாது என ஆணை மட்டம் தட்டுபவளாக இருந்தால்...

ஆண் தனது குடும்பத்தைப் பற்றி முழுமையாக சொன்ன பின்னரும், பெண் அவளது குடும்பத்தைப் பற்றி எதுவும் சொல்லாமல் மவுனம் காத்து வந்தால்...

சில ஆண்களுடன் செக்ஸ் ரீதியாக தொடர்பு வைத்திருப்பவர் என அறிய நேர்ந்தால்...

எதற்கெடுத்தாலும் ஆணை குறை சொல்பவளாக, வேலை ஏவுபவளாக இருந்தால்...

திருமணம் பற்றிய பேச்சை எடுத்ததும் தட்டிக் கழிப்பவளாக இருந்தால்...

என் அழகைப் பார்த்து இன்று இரண்டு நபர்கள் மயங்கினார்கள், காதல் சொன்னார்கள் என்று அவளது அழகை அடிக்கடி புகழ்ந்து கொள்பவளாக இருந்தால்...

ஆண் நண்பர்களுடன் சினிமா, பீச் போன்ற இடங்களில் சகஜமாக உலவுகிறாள் என தெரியவந்தால்...

கல்யாணத்துக்கு அப்புறம் ஏதாவது பிரச்சனை பண்ணினா லேசுல விடமாட்டேன், போலீஸ்ல சொல்லி உள்ளே போட்டுருவேன் என மிரட்டுபவளாக இருந்தால்...

செக்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவளாக இருந்தால்...

திருமணத்திற்கு முன்னர் செக்ஸ் உறவு கொள்வதில் எந்த தவறும் இல்லை என்ற தீவிர கொள்கையுடன் இருந்தால்...

அடிக்கடி விலை உயர்ந்த பரிசுப் பொருட்களைக் கேட்டு நச்சரிப்பவளாக இருந்தால்...

பழைய ஆண் நண்பர்களுடன் தொடர்பு இருத்தல், புதிய ஆண்களிடம் காதலைத் தூண்டுவது போல பேசுதல் இருந்தால்...

இப்படிப்பட்ட பெண்களிடம் இருந்து ஆண் எவ்வளவு சீக்கிரம் விலகுகிறானோ அவ்வளவு நல்லது.