பெண்களை கவர சில வழிகள்

posted Jun 7, 2010, 8:25 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Oct 7, 2011, 11:15 AM ]
மிகவும் நல்ல பிள்ளை போல உபதேசம் பண்ணாதீர்கள். தத்துவங்கள் பேசாதீர்கள். பெண்ணின் அம்மாக்களை வேண்டுமானால் உங்கள் பேச்சுக்கவரலாம். பெண்கள் விரும்ப மாட்டார்கள்.

முகத்தை சீரியஸாய் வைத்துக்கொண்டிருந்தால் பெண்களுக்குப் பிடிக்காது. உங்களை நெருங்கவே பயப்படுவாள். புன்சிரிப்புடன் இருங்கள். எந்தப்பெண்ணும் உருகிவிடுவாள். பெண்ணைப் பார்த்துப் புன்னகை செய்யும் போது, நீங்கள் அவளை நேசிக்கிறீர்கள், பாராட்டுகிறீர்கள் என்று எண்ணி, ஒரு பாதுகாப்பு உணர்வைப் பெறுகிறாள்.சினிமாவிலும், நாடகங்களிலும் கேட்ட வசனங்களை, புத்தகங்களில் படித்ததை ஒப்பிக்காதீர்கள். உங்கள் அடி மனத்திலிருந்து வரும் ஆழமான சொற்களையே பேசுங்கள்.

'உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே?" என்று பேச்சை ஆரம்பித்தால், பெண்கள் வசப்படுவார்கள். அதை அவள் நம்புகிற மாதிரி சொல்ல வேண்டும். 'நீங்கள் யாழ் இந்துக்கல்லூரியிலா படித்தீர்கள்? நீங்கள் யாழ்ப்பாணமா?" இப்படிக் கேளுங்கள்.

'நீ என்ன நட்சத்திரம்?" என்றோ, 'நீங்கள் ஐந்தாம் திகதியில் பிறந்தவரா?" என்று கேளுங்கள். பெரும்பாலான பெண்களுக்கு ஜோசியம் பிடிக்கும்.

(பின்குறிப்பு): உதை விழுந்தால் நான் பொறுப்பல்ல! ப்ரியமுடன் உங்கள்" சத்யா)