அறுபதுக்கு மேல் வயதானவர்கள் தாம்பத்ய உறவில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டுவதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. 65 வயதிற்கு மேற்பட்டோரிடம் தனித்தனியாக நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. புளோரிடா பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசியர் ஜாக்சன் என்பவர் 65 வயதிற்கு மேற்பட்ட 238 பேரிடம் தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடந்த 12 மாதத்தில் மாதம் ஒருமுறை உறவு வைத்துக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக 40 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். 59 சதவிகிதம் பேர் மிகுந்த உற்சாகமுடன் இருந்ததாக தெரிவித்துள்ளனர். திருமணம் மற்றும் செக்ஸ் தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள பலரும் திருமணமான புதிதில் இருந்ததைப் போல உறவின் போது ஆர்வமுடன் செயல்படுவதாக 80 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவானது பாஸ்டனில் நடைபெற்ற ஜெர்னோட்டிகள் சொசைட்டி ஆப் அமெரிக்காவின் 64 வது ஆண்டு அறிவியல் மாநாட்டில் வாசிக்கப்பட்டது. ஐம்பதிலும் ஆசை வரும் என்பார்கள். அதை அறுபதுகளைத் தாண்டிய பின்னரும் அடையலாம் என்பதையே இந்த ஆய்வு வெளிக்காட்டுகிறது. |
சுவாரஸ்யம் >