'கவர்' பண்ண முடியலையா?அறிவுப் பூர்வமாக பேசி அசத்தலாம்!

posted Mar 1, 2012, 10:29 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Mar 1, 2012, 10:32 AM ]
இந்தப் பொண்ணுங்களை புரிஞ்சிக்கவே முடியலை. ஒருசமயம் ஆசையா பேசுறாங்க. அப்புறம் முகத்தை தூக்கி வச்சிக்கிறாங்க என்று புலம்பும் ஆண்கள் அதிகம். ஆழ்கடல் ரகசியத்தைக்கூட அறிந்துவிடலாம் ஆனால் மங்கையரின் மன ஆழத்தை அறிவது இயலாத காரியம் என்று தத்துவம் பேசும் ஆண்கள் ஒரு ரகம். காதலியின் மனதை அறிந்து கொண்டு அவர்களை கவர நினைக்கிறீர்களா? இதோ உங்களுக்காகவே இந்த டிப்ஸ்.

காதலில் வெற்றிபெறவும், மகிழ்ச்சிக்கான திறவு கோலாகவும் திகழ்வது நம்பிக்கை. உங்க காதலி மேல் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். அப்புறம் உங்க காதலியைப் பத்தி முழுவதுமா தெரிந்து கொள்வது அவசியம். அதனால் வாழ்க்கையை பொறுத்தவரைக்கும் உங்க காதலி விரும்பக்கூடிய விஷயங்கள் என்னென்ன? என்று முதல்ல கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க…

பெண்கள் பலவிதம்

ஒவ்வொரு பெண்ணும் வித்தியாசமானவங்க. சில பேருக்கு பிங்க் கலர்னா பிடிக்கும். சில பேருக்கு ஜீன்ஸ் டிரெஸ்னா பிடிக்கும். சில பெண்கள் குதிரைகள்னா ரொம்ப விரும்புவாங்க. இன்னும் சொல்லப் போனா.. சில பெண்கள் “நெய்ல் பாலிஷ்”-னா ரொம்ப விரும்புவாங்க. விருப்பங்களிலேயே இத்தனை வித்தியாசங்கள் இருக்கு. அதனால பொதுவான விஷயங்கள் எல்லாமே பெண்களுக்கு பிடிக்கும்னு நினைக்காதீங்க.

எப்போதுமே ஆண் தான் தன்னிடம் முதலில் வந்து பேச வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் பெண்கள். அதனால எந்த நேரத்திலும் இன்சல்ட் பண்ற மாதிரி பேசாம நல்லா டைம் எடுத்து உங்க காதலியை முழுமையாக தெரிஞ்சு வையுங்க. உங்க காதல் பொன்னானதாக இருக்கணும்னா.. அவங்க சொல்றதை பொறுமையா காதில வாங்கி அவங்களுக்கு பிடிச்சது விரும்புறது எல்லாத்தையும் புரிஞ்சு கொண்டு அதை செயல்படுத்துறதுக்கு ஆரம்பியுங்க.

ரொமான்ஸ் அவசியம்

அதே சமயத்துல நீங்க ரெண்டு பேரும் எங்காவது “டேட்டிங்” போகும் போது அவங்க உங்க கூட இருக்கும் போது நீங்க எப்படி உணர்வீங்க அப்படின்னு அவங்க கிட்ட சொல்லுங்க.ஏன்னா பெண்கள் எல்லாரும் வாழ்க்கையில் அனுபவம் வாய்ந்தவர்கள் கிடையாது. அதனால இன்றைக்கு வரைக்கும் அவங்க உங்கள் கிட்ட இருந்தே பல புதிய விஷயங்களை வெளிக் கொண்டு வர முயற்சிப்பாங்க.

இன்னொரு விஷயம்… தன் காதலன் மட்டும் தன்கிட்ட ரொமான்டிக்கா நடந்துக்கல என்றால், அவங்க ரொம்பவே “டல்” ஆய்டுவாங்களாம். அதனால உங்களுடைய அன்பான பேச்சாலும் அரவணைப்பாலும் உங்க காதலை வெளிப்படுத்துங்க.

தலைமைப் பண்பு

என்ன செஞ்சாலும் சில பெண்களை கவரவே முடியாதுங்க. அப்படிப்பட்ட விதிவிலக்கான பெண்களை அறிவுப்பூர்வமாக பேசி அசத்தலாம். தன்னம்பிக்கை நிறைந்த, தலைமைப் பண்பு கொண்ட ஆண்களை சிலர் விரும்புவாங்க. அப்படிப்பட்ட பெண்களை அவங்களுக்கு ஏற்றார்போல பேசி கவரலாம். ஒருசிலர் சமூக ஆர்வலரா இருப்பாங்க, சமுதாய சேவை செய்வது அவங்களுக்குப் பிடிக்கும். அந்த மாதிரி பெண்களை அவங்களுக்கு பிடித்தமாதிரி நடந்து கொண்டு அசத்தலாம்.

உங்க காதலி எப்படிப்பட்டவங்க அதை தெரிந்து கொண்டு அசத்துங்கள். அவங்க குட்புக்கில் இடம் பெற்றுவிட்டால் உங்கள் காதல் வெற்றிதான்.
Comments