காட்சிப்பிழை (ilusiones opticas ilusiones)

posted Jun 30, 2010, 2:00 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Oct 9, 2011, 10:37 AM ]
காட்சிப்பிழை அல்லது தோற்றப்பிழை என்றால் என்னெவென்று தெரியுமா உங்களுக்கு?
அதைத்தான் ஆங்கிலத்தில் 'இல்யூஷன்' 'ஆப்டிகல் இல்யூஷன்' னு (ilusiones opticas ilusiones) சொல்வாங்க.
இங்க கீழேயிருக்கும் படத்தைப் பாருங்க.ஆப்டிகல் இல்யூஷ்ன்னு எழுதியிருக்கா?அதையே இன்னும் கொஞ்சம் கூர்ந்து பாருங்க. ஆப்டிகல் என்று தோன்றும்.முதல் பார்வையில் சட்டென்று ஒரு தோற்றமும்,கூர்ந்து நோக்கும் போது வேறு தோற்றமும் புலப்படும் நிலைதான் இல்யூஷன் எனப்படுவது.நமது மூளையும் கண்களூம் சேர்ந்து நம்மை ஏமாற்றும் வேலைதான் அது.பொதுவாக நமது மூளை எதையும் இப்படித்தான் இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்புடனே பார்க்க முனையும் போது கண்களும் அத்துடன் ஒத்துழைத்து பிம்பத்தை புலப்படச் செய்கின்றன.

கீழே உள்ள படங்களில் முதல் படத்தில் Tech என்றும் இரண்டாவது படத்தில் ME என்றும் இருப்பது கூர்ந்து பார்த்தால் LEARN என்றும் YOU என்றும் தெரியும்.இப்படித்தான் இல்லாததை 'இருப்பதாக கற்பனை 'செய்வதில் மூளைக்கு பெரும்பங்கு இருக்கிறது என்றால் அதற்கு 'ஆமாம்' போடுவது நம் கண்கள்.இரவு நேரத்திலும் இருட்டான வேளைகளிலும் 'பேய் பிசாசு இருப்பதாக கற்பனையான எதிர்பார்ப்புடன் நாம் பார்க்க,ஏதேனும் நிழல் தெரிந்தால் கூட கண்கள் அதை பேய்போல சந்தேகத்துடன் பார்க்க பயப்படுகிறோம்.

கீழே உள்ளப் படத்தைப் பாருங்க...எந்தப் படமும் அசைவதில்லை.அனிமேஷனும் இல்லை.ஆனாலும் உற்று நோக்கினால் சுழல்வது போலத் தோன்றும்.
ஆனால் இந்த மூளையும்,கண்களும் இப்படியாக 'கூட்டு சதி'செய்வதால்தான் தொலைக்காட்சிகளிலும், கணிணித் திரையிலும் நம்மால் பிம்பங்களையும்,அசையும் படங்களையும் பார்க்க முடிகிறது.