பெண் பேச்சுக்கு அர்த்தம்

posted Oct 21, 2011, 11:16 AM by Sathiyaraj Kathiramalai
காதல் அரும்பிய புதிதில் காதலர்கள் பேசும் பேச்சில் நேரம் போவ தே தெரியாது. அந்த பேச்சில் அவ்வளவு சுவாரசியம் இரு க்கும். இதில் பெரிய வேடிக் கை என்னவென்றால் அவ்வ ளவு நேரம் என்ன பேசினோம் என்றே தெரியாவிட்டாலும் கூட அவர்கள் தொடர்ந்து எதையாவது பேசிக்கொண் டே இருப்பார்கள். பெண் கள் பொதுவாக சுற்றி வளைத்து த்தான் பேசுவார்கள். ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டு வெளியே வேறு ஒன்றை பேசுவார்கள். ரமேஷிடம் பேசும்போது “நீ என்னைக் காதலிக்கிறாயா?” என்று கேட்டாள் சந்தியா. அத ற்கு ரமேஷ் நேரடியாக “ஆமா ம். அதில் என்ன சந்தேகம்” என் றான். ஆனால் அவளோ மனது க்குள் ஹஇவ னிடம் காதலை யார் கேட்டது! விலை உயர்ந்த பரிசு எதையாவது வாங்கித் தருவ தைத் தானே எதிர்பார்க்கிறோம் ‘ என்று நினைத்துக் கொண்டிருந் தாள். அதேபோல் ஹநான் கோபமாக இல்லை’ என்று பெண் சொன்னால் கண்டிப்பாக ஹநான் கோபமாக இருக்கிறேன்’ என்று அர்த்தம். ஹநான் வருந்துகிறேன்’ என்று அவள் ரமேஷிடம் சொன்னால் ஹ நீயும் வருந்து’ என்று பொருள்.ஹநீ என்னை எவ்வளவு தூரம் நேசிக்கிறாய்?’ என்று காதலி கேட்டால் காதலனுக்குப் பிடிக் காத ஏதோ ஒன்றை அவள் செ ய்திருக்கிறாள் என்று அர்த்தம். அதை காதலன் ஜீரணித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர் பார்த்தே இப்படி கேட்கிறாள்.
எதற்காக இப்படி ஒரு பெண் எதற்கெடுத்தாலும் மறைமுகமாகவே பேசுகிறாள்? பெண்கள் எப்போ தும் தங்களது தேவைகளை நேர டியாக சொல்வதில்லை. அவற் றை மறைமுகமாக தெரிவிக்க வே விரும்புகிறார்கள். மேலும் புதியதொரு விஷயத்தைப் பற் றி ஊகித்துக் கொள்வதற்காக வும் இப்படி பேசுகிறார்கள்.
இதைப்பற்றி ஆழமாக சிந்தித் துப் பார்த்தால் அதில் பல ரகசி யங்கள் புதைந்து கிடக்கின்றன.
மற்றவர்களுடனான உறவை வளர்ப்பதற்கும் போர்க் குணம்  எதிர்த்து நின்றல் பிடிவாதம் போன்றவற்றைத் தவிர்க்கவும் சுற்றி வளைத்து பேசுவது உதவுகிறது. மேலும் கருத்து வேறுபாட்டைத் தவிர்க்கவும் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இணை ந்து போகவும் செய்கிறது. சண் டை போடும் உணர்வு தோன் றாமல் இருக்கவும் இப்படி சுற்றி வளைத்துப் பேசுகிறார்கள்.
மறைமுகப்பேச்சை பெண்களுக் குள் பேசும்போது அவர்களுக் குள் புரிதல் ஏற்படுகிறது. பெண்கள் உண்மையான அர்த்தத்தை புரி ந்து கொள்வதில் கெட்டிக்காரர்கள். ஆனால் இதையே ஆண்களி டம் அவர்கள் தெரிவிக்கும்போது எதிர்பார்த்து ஏமாந்து போகிறார் கள். பெண்கள் சுற்றி வளைத்துப் பேசுவதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் ஆண்களிடம் இல்லை. இதற்கு மற்றொரு முக்கியமான கார ணமும் உண்டு.
ஆண்களின் மூளையானது வேட் டையாடுவது போல தனியொரு விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. ஆனால்��? பெண்களின் மூளை அமைப்பு அப்படி இரு ப்பதில்லை. அவர்களால் ஒரே நேரத்தில் 5 விதமான சிந்தனை களில் கூட சுலபமாக ஈடுபட முடிகி றது. அதனால் ஆண்களுக்குப் பெண்களைப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. பெண்களின் பேச்சு ஒரு கட்டுக்கோப்பாக இல்லை எந்த ஒரு நோ க்கமும் அதில் இருப்பதில்லை என்பது போல ஒரு குழப்பத்தை ஆண்களுக்கு உண்டாக்கும். அதனால் பெண்களுடன் கருத்து வேறுபாடுகள் உண் டாகின்றன. அவர்களை ஆண்கள் அடிக்கடி குற்ற ஞ்சாட்டு கின்றனர்.
பெண்களின் மறைமுகப்பேச்சு தொழில் புரியும் இடத்தில் பிரச்சி னைகளை உரு வாக்கக்கூடும். அங்கு நேரிடையான விள க்கங்கள் தான் தேவை. அப்போதுதான் தகவல்கள் எந்த வித குழப்பமும் இன்றி தேவையானவர்களிடம் ஒழுங்காகப் போய்ச்சேரும். அதேபோல் ஒரு பெண் ஆணிடம் தொழில் சம்பந்தமாக ஏதாவது பேசினால் அந்த ஆணுக்கு அவள் என்ன பேசினாள் என்பது புரியாவிட்டாலும் கூட அவன் புரிந்து கொ ண்டதைப் போலத் தலை யாட்டி விடுகி றான். இதைப் பெண் உணர்ந்து கொள்ள வேண்டும். அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணுக்கு அவளது மேலதி காரி ஆணாக இருக்கும்பட்சத்தில் அந்த பெண் தனது கோரிக்கையை அவரிடம் கூறும் போது அவர் ஏற்றுக்கொள்ள முடியாத சூழ் நிலை உண்டாகிறது. இதற்கு காரணம் பெண்களின் மறைமுகப் பேச்சு தான். அதனால்தான் ஆண்களின் பார்வையில்பெண்கள் சுற்றி வளைத்துப் பேசுபவர் களாகத் தெரிகிறார்கள்.