உங்க பேச்சை மற்றவர் கேட்கணும் என எதிர்பாற்பவரா ?

posted Dec 11, 2011, 8:17 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Dec 11, 2011, 8:18 AM ]
ஹாய் பிரண்ட்ஸ், நம்மல்ல பலபேர் நாம என்ன சொன்னாலும் அதை அப்படியே மத்தவங்க ஏத்துக்கணும் அப்படின்னு தான் எதிர்பார்க்கிறோம். அப்படி செய்றவங்க தான் நமக்கு நெருங்கிய நண்பர்களாகவோ அல்லது நமது அபிமானத்துக்கு உரிய நபர்களாகவோ இருப்பாங்க.அப்படி இல்லாம நம்ம கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்றவங்களப் பார்த்தா நமக்கு பிடிக்கறதில்ல. ஆனா உண்மை என்ன தெரியுமா? இப்படி நாம சொல்றதுக்கெல்லாம் ஆமாம்சாமி போடுற நபர்களாலேயோ, ஜால்ரா தட்டுற நண்பர்களாலேயோ நமக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை.

மாறாக, நாம் பேசுவதற்கு எதிர் பேச்சு பேசுபவர்களும், நம்மை விமர்சனம் செய்பவர்களும் தான் நம்முடைய முன்னேற்றத்துக்கு உதவுபவர்கள். அவர்களிடமிருந்து தான் நாம் முன்னேற்றத்துக்கான பல புதிய விஷயங்களை பெறுகிறோம்.
ஆச்சரியமா இருக்கா; உண்மை அதுதான்! கொஞ்சம் யோசிச்சு பாருங்க. நீங்கள் சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி போடும் நபர்களாகவே உங்களை சுற்றி அமைந்திருந்தால், உங்க குறைகளை நீங்கள் எப்படி சரிசெஞ்சுக்க முடியும்? அதனால இனிமே, உங்க கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்றவங்கள எதிரியாக நினைக்காதீங்க.
மாறாக, அவங்க மூலமா உங்கக்கிட்ட இருக்குற குறை என்ன? நீங்க மாத்திக்க கூடிய விஷயம் என்ன? அவங்ககிட்ட இருந்து நீங்க எதை கத்துக்க முடியும் என்பதை யோசிச்சு உங்க குறைகளை நிவர்த்தி செஞ்சுக்கோங்க.
அப்பத்தான் உங்களை மேலும் மேலும் உயர்த்திக் கொண்டு முன்னேற முடியும். சரியா! இனிமே உங்களைக் குறை கூறுபவர்களை பார்த்து கோவப்படாம, எதிரியா பாக்காம அவங்க சொல்ற கமன்ட்ஸ்க்கு “தேங்க்ஸ்’ சொல்லுங்க! முன்னேறுங்க! வெற்றி பெறுங்க!

Share