ரகசியத்தைக் காப்பதில் ஆண்களை விட பெண்கள் படு மோசம்

posted Dec 6, 2011, 9:53 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Dec 6, 2011, 9:53 AM ]
பெண்களால் ரகசியத்தை ரகசியமாக வைக்கவே முடியாது என்பது ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதுக்கு ஆய்வு எங்களுக்கே நன்றாகத் தெரியும் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.

ஆனால் தெரிந்த விஷயத்திற்காகவும் ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் 3,000 பெண்கள் கலந்து கொண்டனர். அதில் 10ல் ஒரு பெண் தன்னால் ரகசியத்தை மனதில் வைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இது மிகவும் ரகசியமாக வைக்க வேண்டும் என்று சொன்னால் கூட அவர்களால் ரகசியத்தை காப்பாற்ற முடியதாம்.


ஆய்வில் கலந்து கொண்ட பெண்களில் 85 சதவீதம் பேருக்கு அடுத்தவர்களைப் பற்றிப் பொறணி பேசுவது என்றால் அலாதிப் பிரியமாம். 13 சதவீதம் பேருக்கு வேண்டும் என்றே பொறணியைக் கிளப்பிவி்டுவதில் ஒரு ஆத்ம திருப்தி.

ஒரு படத்தில் வடிவேலு அரஜுனிடம் தான் எப்படி ஒரு பேக்கரி உரிமையாளரானார் என்பதை கூறிவிட்டு இல்லை உளறிவிட்டு அது பரம ரகசியம் யாரிடமும் சொல்லிவிடாதே என்பார். விடிந்து பார்த்தால் ஊருக்கே அந்த ரகசியம் தெரிந்திருக்கும்.

நம்ம பெண்களும் அப்படி தான் இருக்கிறார்கள். அதனால் ஆண்கள் ஒரு டெக்னிக்கை பின்பற்றுகிறார்கள். ஏதாவது ஒரு விஷயத்தை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என்றால் அதை ஒரு பெண்ணிடம் கூறி யாருக்கும் சொல்லிவிடாதே என்று கூறுகிறார்கள். உடனே அந்த விஷயம் ஊருக்கே பரவி விடுகிறது.

கூடி, கூடிப் பொறணி பேசுவதில் பெண்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம் கிடைக்கிறது.

உலக விஷயங்களைத் தெரிந்து கொள்வதை விட அக்கம்பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதில்தான் பெரும்பாலான பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்களாம். நமக்குத் தெரியாதது கூட நம்ம வீட்டுப் பெண்களுக்குத் தெரிந்திருக்கிறதே என்று ஆண்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு பெண்களின் கியூரியாசிட்டி இருக்கிறதாம்.

பகலில் பார்த்துப் பேசணும், ராத்திரியில் அதுவும் பேசக் கூடாது என்பார்கள். இந்த வரிசையில், பெண்களிடம் பேசவே கூடாது என்பதையும் சேர்க்கலாம்.