மருத்துவம்
ரத்தத்தை சுத்தமாக்கும் சத்தான உணவுகள்!
மனித உடம்பில் ரத்தமானது சக்தி கடத்து பொருளாக செயல்படுகிறது. ரத்தம்தான் நாம் உண்ணும் உணவில் இருந்து சத்துக்களை கிரகித்து ஆக்சிஜனாக மாற்றி மூளைக்கும், இதயத்திற்கும் அனுப்பவதோடு மனித நடமாட்டத்திற்கு தேவையான சக்தியையும் அளிக்கிறது. ரத்தம் சுத்தமானதாக இருந்தால்தான் நம்மால் ஆரோக்கியமாக நடமாடமுடியும். அசுத்தக் கலப்பில்லாமல் ரத்தத்தை சுத்திகரிக்கும் சக்தி அன்றாடம் உண்ணும் உணவுப்பொருட்களிலேயே உள்ளது. உணவியல் நிபுணர்கள் கூறும் அவற்றை சாப்பிட்டு பாருங்களேன். எலுமிச்சை ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரித்து அவற்றை கழிவுகளாக வெளியேற்றும் சக்தி எலுமிச்சைக்கு உண்டு. தினசரி காலை நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட ரத்தத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும். ஒருவாரம் இதை முயற்சித்துப் பாருங்களேன். உங்களின் உடலில் கிடைக்கும் அபரிமிதமான சக்தியை நீங்களே உணர்வீர்கள். நோய் எதிர்ப்பு சக்தி மிளகு உணவுப் பொருட்களில் சுவைக்காக நாம் சேர்த்துக்கொள்ளும் மிளகு சிறந்த ரத்த சுத்திக்கரிப்பானாக உள்ளது. மிளகானது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் உள்ளது. எனவே உணவுகளில் மிளகு சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். பசுமை காய்கறிகள் பச்சை நிறமுடைய காய்கறிகள், கீரைகள் உடல் சக்தியை அதிகரிப்பவை என்பது அனைவரும் அறிந்ததே. இதில் உள்ள குளோரோபில் மனிதர்களுக்குத் தேவையான சக்தியை ரத்தத்திற்கு அளிக்கிறது. டாக்ஸினை ரத்தம் கிரகித்துக் கொள்ள உதவிபுரிகிறது. நமக்குத் தேவையான சக்தி கிடைக்க அன்றாட உணவுகளில் பச்சைக் காய்கறி சாலட்களை அதிகம் உட்கொள்ளவேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். கண்ணிற்கு ஒளிதரும் காரட் காரட்டில் உள்ள கரோட்டின் சத்து கண்ணிற்கும், சருமத்திற்கும் நன்மை தரக்கூடியது. நமது உணவில் காரட் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள மாசுக்கள் சுத்திகரிக்கப்படுகின்றன. சமைத்து உட்கொள்வதை விட காரட் ஜூஸ் பருகுவது ஆரோக்கியத்திற்கு ஏற்றது. வெள்ளைப்பூண்டு உடல் ஆரோக்கியத்தைக் காப்பதில் வெள்ளைப்பூண்டு சிறந்த உணவாகும். இதில் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றுகிறது. ரத்தத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. இது இறந்து போன செல்களை நீக்குவதோடு புதிய செல்களை ரத்தத்தில் விரைந்து உற்பத்தி செய்கிறது. எனவே வெள்ளைப்பூண்டினை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதோடு உடலுக்குத் தேவையான சக்தி எளிதில் கடத்தப்படும். இதனால் உடலும் உற்சாகமடையும் என்பது அவர்களின் அறிவுரையாகும். |
இளமையை மீட்டுத்தரும் கடலைமாவு மாஸ்க்!
கோடை வெயிலினாலும், தூசுக்களினாலும் சருமம் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறது. கூந்தலும் மாசடைந்து வறண்டு விடுகிறது. சருமம், கூந்தல் பாதிப்பினால் முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவதோடு பொலிவு குன்றிவிடும். இழந்த அழகை மீட்க வீட்டில் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களே போதுமானது. கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பொருட்களை உபயோகப்படுத்தி முகத்தையும், சருமத்தையும் அழகாக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். கடலைமாவு, மஞ்சள் பூச்சு இந்தியாவில் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் பொருட்கள் கடலைமாவு, மஞ்சள்தூள். இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கும். சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல செய்து முகத்தில் பூசி உலர வைக்கவும். அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். சருமம் மென்மையாகும். கடலைமாவு பேஷியல் கடலைமாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும். இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும். அதனை முகத்தில் நன்றாக பேக் போட்டு ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளிச் என்று ஆகும். அதேபோல் குளிக்கும் போது கடலைமாவு பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம். பால், பன்னீர் கடலைமாவு இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை நன்றாக முகத்தில் பூசவும், சருமம் கருப்பாக உள்ள இடங்களிலும் இந்த கலவையை பூசி ஊறவைக்கவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும் இளமையோடு காட்சி தரும். தயிர், எலுமிச்சை, கடலைமாவு சருமம் எண்ணெய் வழிந்து பிசுபிசுப்பாக இருந்தால் அதற்கு கடலைமாவுடன் தயிர் சேர்த்து பேஷியல் போடுவது முகத்தை பொலிவாக்கும். ஒரு கிண்ணத்தில் கடலைமாவு எடுத்து அதில் தயிர், எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். சில நிமிடங்கள் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனால் தேவையற்ற எண்ணெய் பசை காணாமல் போவதோடு முகம் புத்துணர்ச்சியாகும். டல் முகம் பொலிவாக தோலுடன் இருக்கும் கடலைபருப்பு அரை கிலோ துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி. நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்துக்கு "பேக்" போட்டு ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும். பருக்கள் நீங்க கடலை பருப்பு 1 டீஸ்பூன். ஒரு மிளகு இவற்றை எடுத்த ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவையுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து கலக்குங்கள். பிறகு இதை முகத்தில் "பேக் ஆகப் போட்டு, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ்வேண்டும். பருக்கள் இருந்த படிப்படியாக மறைந்து போகும். |
வலிகளைப் போக்கும் வல்லமை படைத்த இஞ்சி!
சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை, கொத்தமல்லி, இவை அனைத்தும் மருத்துவ குணம் கொண்ட பொருட்கள். இஞ்சியே இல்லை என்றால் நமக்கு சாப்பாடு ருசிக்காது; பசி ஏற்படாது. இஞ்சி எரிக்கும் குணத்தை உடையது. பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது. கடினமான உணவுகளைக் கூட எளிதில் ஜீரணமாக்கும் தன்மை கொண்டது. இஞ்சியில் உள்ள சத்துக்கள் சமையலில் பயன்படுத்தப்படும் இஞ்சி பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இஞ்சியில் கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாது உப்புகள் உள்ளன. எ, பி, சி போன்ற வைட்டமின்களும் காணப்படுகின்றன. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை கரைந்து விடும். இஞ்சி சாறில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும். இஞ்சி காயகல்பம் இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் சீவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். இதனை தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட உடல் ஆரோக்கியமாகி, பித்தம் சாந்தப்பட்டுவிடும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும் அழகும் உண்டாகும். நெஞ்சு உரம் பெறும். வாய்வுத் தொல்லை நீங்கும் இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும். இஞ்சியை வதக்கி தேன் விட்டு கிளறி நீர் விட்டு கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும். இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்த பின் நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும். வலி நீக்கும் நிவாரணி உடலில் எந்தக் கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது இஞ்சி. இயற்கை வழங்கிய கொடையான இஞ்சி, மூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும் தன்மை உடையது. இதயத்தை காக்கும் இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சளி இருமல் போக்கும் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, ஒரு கோப்பை பாலில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் கற்கண்டு சேர்த்து குடித்துவர, இருமல், சளி தொல்லைகள் நீங்கும். இஞ்சி 15 கிராம், வெள்ளெருக்கன் பூ 5, மிளகு 10 இவைகளை நசுக்கி இரண்டு குவளை நீர்விட்டு சுண்ட காய்ச்சி வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்துவர சுவாசகாசம், இரைப்பு நீங்கும். சுவாச இருமலுக்கும், சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும்போதும் இந்தக் கஷாயத்தை காலை மாலை நோய் தீரும் வரை கொடுக்கலாம். இனி இருமல், சளி வந்தால் இந்த முறையை பின்பற்றி பாருங்கள் உடனடி பலன் கிடைக்கும். |
பளிச் தோற்றத்திற்கு மாம்பழக் கூழ் பேஷியல்
கோடை சீசன் வந்தாலே மாம்பழ வரத்து அதிகரித்துவிடும். மாம்பழம் சாப்பிட மட்டுமல்ல கோடையில் சருமத்தைப் பாதுகாக்கும் அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது. மாம்பழக்கூழில் பேசியல் செய்வதன் மூலம் எழிலான தோற்றத்தைப் பெறமுடியும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். மாப்பழக்கூழ் மாம்பழத்தை தோல் உரித்து அதன் சதையை எடுத்து முகம், கழுத்து பகுதிகளில் தேய்க்கவும். இதன் மூலம் மாம்பழத்தின் சாறு குளிர்ச்சியை ஏற்படுத்தி சோர்வடைந்த சருமத்தை புத்துணர்ச்சியடையச் செய்கிறது. மாம்பழக்கூழ் தேய்த்த முகத்தில் 6 முதல் 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். பின்னர் குளிர்ந்த பாலை ஒரு பஞ்சில் தொட்டு முகத்தில் உள்ள பழக்கலவையை துடைத்து எடுத்து விடவேண்டும். பின்னர் குளிர்ந்த தண்ணீர் ஊற்றி முகத்தை கழுவ வேண்டும். தயிர், மாம்பழ பேஷியல் மாம்பழத்தை தோலுரித்து அதன் சதையை எடுத்து வைக்கவும். அதனுடன் ஒரு டீ ஸ்பூன் தயிர், மற்றும் எலுமிச்சைச் சாறு ஊற்றி நன்றாக கலக்கவும். இந்த கலவையை முகம் மற்றும் கைகளில் பேஷயல் போடவும். 15 நிமிடம் நன்றாக ஊறவைத்த பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். கோடை காலத்தில் இந்த பேஷியலை வாரத்திற்கு மூன்று நாட்கள் செய்யவேண்டும். சருமம் ஜொலி ஜொலிக்கும். முட்டை, மாம்பழக்கூழ் பேஷியல் அதிக பணம் செலவில்லாமல் முகத்தை ஜொலிக்கச் செய்வதில் இது எளிமையான பேஷியல் முறையாகும். மாம்பழத்தை தோல் உரித்து சதையை எடுத்து நன்றாக அடித்து கூழாக்கவும். அதோடு முட்டையின் வெள்ளைக் கருவை ஊற்றி நன்றாக கலக்கவும் அதோடு ஒரு டீ ஸ்பூன் தேனை ஊற்றி நன்றாக அடித்து கலக்கி முகத்திற்கும், கழுத்துப் பகுதியிலும் அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து மென்மையாக கழுவி ஒத்தடம் கொடுப்பதுபோல துடைக்கவும். சருமம் பொலிவுறும். ஓட்ஸ், மாம்பழக்கூழ் கோடை வெப்பத்தினால் கருமையடைந்துள்ள சருமத்தை புத்துணர்ச்சியாக்க இந்த பேஷியல் மிகச்சிறப்பானது. ஒரு கிண்ணத்தில் மாம்பழக்கூழினை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் 3 டீ ஸ்பூன் ஓட்ஸ் பவுடர், 3 டீ ஸ்பூன் பாதம் பவுடர், 3 டீ ஸ்பூன் பாலாடை சேர்த்து நன்றாக கலக்கவும். அதனை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். 20 நிமிடங்கள் ஊறவைத்து நன்றாக குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ முகம் பளிச் தோற்றத்தை தரும் இது வெயிலில் ஏற்பட்ட கருமையை போக்குவதோடு முகத்தை புத்துணர்ச்சியாக்கும். மாம்பழக்கூழ் கொண்டு செய்யப்படும் பேஷியலை முயற்சி செய்து பாருங்கள் கோடை வெப்பத்தில் வெளியே சென்று வந்தாலும் உங்கள் முகம் ஜொலி ஜொலிக்கும். |
வயதானாலும் அழகாய் தெரிய சில ஆலோசனைகள்
தினம் தினம் நமக்கு வயதாகிறது. ஒருநாள் உறங்கி எழுந்தாலே போதும் நம்முடைய
வாழ்நாளில் ஒருநாள் முடிந்து விடுகிறது. நமக்குத்தான் வயதாகிவிட்டதே என்று
எண்ணாமல் உற்சாகத்தோடு இருந்தாலே இழந்த இளமையை மீட்டெடுக்கலாம் என்கின்றனர்
அழகியல் நிபுணர்கள். ஐம்பது வயதிலும் அழகாய் தெரிய சில ஆலோசனைகளையும்
அவர்கள் கூறியுள்ளனர். ஆணோ, பெண்ணோ இப்போதெல்லாம் முப்பது வயதிலேயே நரைக்கத் துவங்கிவிடுகிறது. நரைமுடிதான் முதுமையின் அடையாளத் தோற்றம் என்பதால் அதை மறைக்க பெரும்பாலோனோர் பிரயத்தனப்படுகின்றனர். நரையை மறைக்க டை உபயோகியுங்கள்... கருங்கூந்தலை கண்ணாடியில் பார்க்கும் போது உற்சாகம் பிறக்கும். டை உபயோகிப்பதில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால் பூவரசங்காய் முக்கால் பங்கும், கரிசலாங்கண்ணி கால் பங்கும் எடுத்து பக்குவமாக அரைத்து தலையில் பூசிக்கொள்ளுங்கள் முடி நல்ல பொலிவோடு அழகாக இருக்கும். கண் சுருக்கம் போக்கவும் வயதானால் கண்கள் சுருக்கம் ஏற்படுவது இயல்பு. முதுமையில் கண்களுக்கு கீழே கருவளையம் வரும் அது உங்கள் வயதைக்கூட்டி முதியவராக தோற்றமளிக்கச் செய்யும். எனவே கண் சுருக்கத்தைப் போக்க கண்களுக்கு அதிக சிரமம் தரும் வேலைகளை தவிர்க்கவேண்டும். அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, அதிகம் நேரம் புத்தகம் படிப்பது போன்ற பழக்கங்களை குறைத்துக் கொள்ளுங்கள். கண்களின் கருவளையத்தை தவிர்க்க ஆரஞ்சுப்பழச் சாற்றை கண்ணுக்குக் கீழே தேய்த்து சற்று நேரம் கழித்து இதமான வெந்நீரில் கழுவிவிடுங்கள் பிறகு அந்த இடத்தில் வெள்ளரிப் பிஞ்சை தேயுங்கள். மெல்ல மெல்ல கருவளையம் காணாமல் போய்விடும். கழுத்து சுருக்கம் என்பதும் உங்களின் வயதை கூட்டும் அதனை அகற்ற சொர சொரப்பாக அரைக்கப்பட்ட அரிசி மாவையும், கடலை மாவையும் கழுத்துப்பகுதியில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பிறகு நீரில் கழுவுங்கள். இதனால் கழுத்துச் சுருக்கம் காணாமல் போகும். நீர்ச் சத்து குறைபாடு முதுமையில் நீர்சத்து குறைபாடு என்பது உடலில் ஏற்படும். இதனால் பலருக்கு நா வறட்சி, உதடு கறுத்துப் போதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். நா வறட்சியை தவிர்க்க அடிக்கடி வெந்நீர் குடியுங்கள். குறைந்தது ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் தண்ணீராவது குடிக்க பழகுங்கள். முகச் சுருக்கம் போக்க எலுமிச்சை பழத்தைத் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் ஆவி பிடியுங்கள். கால்வெடிப்பு குணமாக கால்வெடிப்புகள் உங்கள் முதுமை தோற்றத்தை மேலும் அதிகப்படுத்தும் என்பதால் இதமான சுடுநீரில் பாதத்தை நனைய விட்டு நன்கு கழுவுங்கள் பிறகு வெடிப்பு உள்ள இடத்தில் கற்றாழை கொண்டு வந்து அதனுடைய சாறை கால்வெடிப்புகளில் தடவி சிறிது நேரம் ஊறவிடுங்கள். மஞ்சள் பற்று போட்டாலும் பித்த வெடிப்பு கால் ஆணி ஆகியவை குணமாகிவிடும். கண்ணக் குழி தவிர்க்க இளமையில் கன்னங்களில் குழி விழுவது அழகை அதிகரிக்கும். அதுவே முதுமையில் என்றால் வயதான தோற்றத்தை அதிகரிக்கும். எனவே இதனை தவிர்க்க தினந்தோறும் காலையிலும், மாலையிலும் இதமான சூடுள்ள வெந்நீரைக் குடித்து அதை இரண்டு கன்னப்பகுதியிலும் ஒதுக்கி உப்ப வைக்க வேண்டும். சிறிது நிமிடம் இப்படியே வைத்திருந்து பிறகு கொப்பளியுங்கள். பிறகு கன்னங்களின் உட்புறத்தில் விரலால் மசாஜ் செய்யவேண்டும். இப்படி சில வாரங்கள் செய்தாலே போதும் கன்னங்களில் குழி மறைந்து இளமைத் தோற்றம் கிடைக்கும். இயற்கையை ரசியுங்கள் உடல் ஆரோக்கியமாக இருந்தாலே இளமையாக உணர்வுகளும் மனநிலையும் உங்களுக்குள் இருக்கும். உங்கள் மனநிலையில் வயதானவர் என்கிற எண்ணத்தை தூக்கி எறிந்துவிட்டு நாம் இளைஞன். நம்மால் எதையும் செய்ய முடியும் நம் உடல் மிகமிக உற்சாகமாக இயங்குகிறது. நூறு சதவிகிதம் இளமையாக இருக்கிறது. ஆரோக்யமாக இருக்கிறது என்றே எண்ணுங்கள்... கண்டிப்பாக உங்கள் தோற்றத்தில் நீங்கள் இளைஞராக மாறிவிடுவீர்கள். அடுத்து இயற்கை அழகை நேசியுங்கள். புதுப்புது விஷயங்களை ரசியுங்கள் அப்புறம் என்ன ஐம்பது வயதிலும் அழகு ராணி நீங்கள்தான். |
கணினி வேலையா ? உங்களுக்கு சீக்கிரம் வயசாயிடும் ! – எச்சரிக்கை ரிப்போர்ட்
தகவல் தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சியினால் இன்றைக்கு அனைத்து
துறைகளிலுமே கணினி பயன்பாடு என்பது இன்றியமையாததாகிவிட்டது. இதில் தகவல்
தொழில்நுட்ப துறை போன்ற குறிப்பிட்ட சில துறைகளில் பணியாற்றுபவர்கள்,அதிக
நேரம் கணினி முன்னர் அமர்ந்து வேலை பார்க்க வேண்டிய கட்டாயம்
ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களை விரைவில் முதுமை ஆட்கொள்வதாக ஆய்வு முடிவு
ஒன்று எச்சரிக்கின்றது. குறிப்பாக பெண்களுக்கு முதுமை சீக்கிரம்
ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அழகுக்கு ஆபத்து இங்கிலாந்தைச் சேர்ந்த அழகியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மைக்கேல் ப்ரகர், கணினியில் பணியாற்றும் ஏராளமான பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கணினி முன்னர் ஒருவர் நீண்ட நேரம அமர்ந்திருந்தால் அவரது கீழ் தாடை தொங்கி போய்விடும் என்றும், இதற்கு காரணம் ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதுதான் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சிடு சிடு பார்ட்டிகள் கணினியில் வேலை செய்யும் பெண்கள் பெரும்பாலான நேரம் கடு கடுவென இருப்பதற்கு, காரணம் அவர்கள் நீண்ட நேரம் கணினி முன்னர் அமர்ந்து மிக அதிகமாக கவனம் செலுத்தி வேலை செய்வதுதான் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பெண்களுக்கு நெற்றியில் விரைவிலேயே சுருக்கம் மற்றும் கண்களை சுற்றி தோல் சுருக்கம் போன்றவை ஏற்படுகிறது. இது குறித்து இவர்கள் மிக அதிகமாகவே கவலையும், அச்சமும் கொள்கின்றனர் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே கணினி முன்பு அமர்ந்து வேலை செய்தாலும் சிறிது நேரம் எழுந்து நடப்பது, மனதிற்கு பிடித்தவருடன் உரையாடுவது என அடிக்கடி ரிலாக்ஸ் செய்வது மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். |
முகம் ஜொலி, ஜொலிக்க என்ன செய்யலாம்?
பெண்கள் மேக்கப் போட்டால் தான் அழகாக இருக்க முடியும் என்பதில்லை. மேக்கப் எதுவும் போடாமலேயே அழகாகத் தோன்ற முடியும். அந்த காலத்து தமிழ் பெண்கள் முகத்தை கடலை மாவு போட்டு கழுவி, மஞ்சள் பூசி குங்குமம் வைத்து அழகாக இருப்பார்கள். தற்போதுள்ள பெண்கள் பவுன்டேஷன், கிரீம், பவுடர், லிப்ஸ்டிக், மஸ்காரா, ஸ்டிக்கர் பொட்டு என்று எத்தனை பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். அடேங்கப்பா அப்பா மற்றும் கணவன்மார்களின் காசெல்லாம் மேக்கப் பொருட்கள் வாங்கியே காலியாகிவிடும் போல. அப்பா, கணவர் காசை மிச்சப்படுத்தி இயற்கையாகவே எப்படி அழகாகத் தோன்றலாம் என்பதைப் பார்ப்போம். இரவு நேரத்தில் நிம்மதியாக தூங்குங்கள். ஒழுங்காகத் தூங்கினாலே முகம் தெளிவாக இருக்கும். இல்லையென்றால் நீஙகள் என்னதான் மேக்கப் போட்டாலும் முகம் சோர்வாகவே காணப்படும். ஒரு நாளைக்கு 3 அல்லது 4 தடவை முகத்தை குளி்ர்ந்த நீரால் கழுவுங்கள். வெளியே சென்றுவிட்டு வந்தால் முகத்தை கழுவுங்கள். கண்டதை முகத்திற்குப் போடாமல் கடலை மாவை பேஸ்ட் போன்று செய்து முகத்தில் தடவி காய வைத்து கழுவிப் பாருங்கள் முகம் ஜொலிக்கும். வீட்டில் இருக்கும் தேனை எடுத்து அதில் சிறிதளவு உப்பு கலந்து முகத்தில் தடவி ஊறவைத்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வர முகம் புதுப்பொலிவு பெறும். வீட்டில் ஆலிவ் எண்ணெய் இருக்கிறதா வாரத்தில் 2 முறையாவது முகம் மற்றும் உடலில் தடவி ஊற வைத்து குளியுங்கள். அது தோலுக்கு நல்லது. உங்களுக்கு பாலாடை உண்ண பிடிக்காதா, சாப்பிடாதீர்கள். அதை எடுத்து கீழே போடாமல் முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்து வந்தீர்கள் என்றால் உங்களைப் பார்ப்பவர்கள் எல்லாம் அழகுக் குறிப்பு கேட்பார்கள். இதையெல்லாம் விட எளிய வழி நிறைய தண்ணீர் குடியுங்கள். தண்ணீர் குடிப்பதால் தோல் அவ்வளவு சீக்கிரம் சுருங்காது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இப்படி இயற்கையாகவே கிடைக்கும் அழகு சாதனப் பொருட்கள் இருக்க கண்டதை போட்டு முகத்தை கெடுத்துக் கொள்வானேன். |
பொட்டுவைத்த முகம் அழகு...!
பெண்களின் முகத்திற்கு அழகும் வசீகரமும் சேர்ப்பவை பொட்டு. முந்தைய
காலத்தில் நெற்றி நிறைய அகலமான குங்குமப் பொட்டு வைப்பது வழக்கம். இரு
புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடத்தை நெற்றிப் பொட்டு என்பர். மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, நினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடம் இது. யோகக் கலை இதனை ஆக்ஞா சக்கரம் என்கிறது. எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியை வெளிப்படுத்தும். அதிலும் முன்நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும் மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, தலைவலி அதிகமாவதை உணரலாம். நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது. நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது. எனவே வெறும் நெற்றியாக இருக்கக் கூடாது என்கின்றனர் முன்னோர்கள். இன்றைக்கு ஸ்டிக்கர் பொட்டுக்களின் வருகைக்குப் பின்னர் பல வித டிசைன்களில் பொட்டுக்கள் மங்கையரின் முகத்தை அலங்கரிக்கின்றன. நாம் வைக்கும் பொட்டு நம்முகத்திற்கு ஏற்றதாக இருந்தால் அது அழகினை அதிகரித்துக் காட்டும். எனவே முக அமைப்பிற்கு ஏற்ற பொட்டுகளை கூறியுள்ளனர் அழகியல் நிபுணர்கள். நீளமான பொட்டு வட்ட வடிவ முகம் இவர்கள் நீளமான பொட்டுகளை உபயோகிக்கவேண்டும். நீளமான பொட்டு இவர்களது உருண்டை முகத்தை சற்று நீளவாக்காக மாற்றியதுபோல் அழகு தரும். இவர்கள் நெற்றி குறுகலாக இருந்தால், அவர்கள் புருவங்களுக்கு மத்தியில் பொட்டு வைக்கவேண்டும். இதய வடிவ முகம் இதய வடிவ முகம் கொண்டவர்கள் சற்றே வித்தியாசமானவர்கள். இவர்கள் குங்குமத்தினால் பொட்டு இட்டுக்கொள்வது முகத்தை அழகாக்கும். ஸ்டிக்கர் பொட்டுக்களில் சிறிய அளவில் நீளமான பொட்டுகள் முக வசீகரத்தை அதிகரித்துக் காட்டும். ஓவல் வடிவ முகம் ஓவல் வடிவ முகம் கொண்டவர்கள் புருவத்திற்கு சற்று மேலே நெற்றியில் வட்டப் பொட்டு வைப்பது அழகை அதிகரிக்கும். நீளமான ஸ்டிக்கர் பொட்டு வைத்தாலும் வசீகரமாக இருக்கும். சதுர முகம் உள்ளவர்கள் நீளமாக பொட்டுகளை வைக்கக்கூடாது. அகலம் அதிகமுள்ள பொட்டுகளை வைத்துக்கொள்ளலாம். உருண்டை மற்றும் முட்டை வடிவிலான பொட்டுகள் இவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். வண்ணத்துப் பூச்சி வடிவ டிசைன் பொட்டுக்கள் எடுப்பாக இருக்கும். முக்கோணப் பொட்டுக்கள் முக்கோண வடிவ முகம் உள்ளவர்களுக்கு அனேகமாக எல்லாவகைப் பொட்டுகளும் பொருந்தும். நெற்றி அகலமாக இருந்தால், நீளமான பொட்டுகளை பயன்படுத்த வேண்டும். முக்கோண வடிவிலான பொட்டுகளும் இவர்களுக்கு நன்றாக இருக்கும். அகலமான நெற்றியாக இருந்தால், புருவத்தில் இருந்து ஒரு சென்டிமீட்டருக்கு மேல் பொட்டுவைக்க வேண்டும். முகத்தின் வடிவம் மட்டுமின்றி உடை, சரும நிறம் போன்றவைகளும் பொட்டுடன் சம்பந்தப்பட்டதுதான். அதனால் அவைகளுக்கும் பொருத்தம் ஏற்படும் விதத்தில் பொட்டு வைக்கவேண்டும். கோதுமை நிற சரும பெண்களுக்கு எல்லா நிற பொட்டுகளும் பொருத்தமாக இருக்கும். |
முத்து முத்தாய் முகப்பரு : பன்னீர் சந்தனக் கலவைப் போதும்
பருவ வயது ஆண், பெண்களின் மிகப் பெரிய பயம் பருக்கள். முகத்தில் பரு
தோன்றினாலே தேவையற்ற மன உளைச்சலும், பதற்றமும் இளயதலைமுறையினருக்கு
ஏற்படுகின்றன. எண்ணைத் தன்மை உடைய சருமத்தை உடையவர்களில் 90 சதவீதம்
பேருக்கு முகப்பரு வந்துவிடுகிறது. இதர சருமம் கொண்டவர்களில் 50 சதவீதம்
பேருக்கு முகப்பரு பாதிப்பு ஏற்படுகிறது. பருக்களின் பல வடிவங்களில்,
கரும்புள்ளி, வெண்புள்ளிகள் ஆகும். பருவமாற்றத்தினால் ஏற்படும் ஹார்மோன்
சுரப்பு, எண்ணெய் பசை அதிகரிப்பு, இவற்றை விட பாக்டீரியா தொற்று போன்றவையே
பருக்கள் ஏற்பட காரணமாகின்றன. இதனால் சருமத்தில் சிறு கட்டிகளும்,
வீக்கங்களும் ஏற்படுகின்றன. முகம், கழுத்து, மார்பு, முதுகு இவற்றில்,
சீழ் போன்ற திரவம் நிறைந்த பருக்களாக கரும்புள்ளி, வெண்புள்ளிகளாக
தோன்றுகின்றன. எலுமிச்சைச் சாறு எலுமிச்சைச் சாறு, ரோஜா பன்னீர் சம அளவு எடுத்து அதனை கலந்து முகத்தில் பூசி அரைமணிநேரம் ஊறவைத்து பின்னர் வெது வெதுப்பான நீரில் கழுவவும். வாரம் மூன்று நாட்களுக்கு இதனை அப்ளை செய்தால் முகப்பரு மறைந்துவிடும். எந்த காரணம் கொண்டும் எலுமிச்சைச் சாற்றினை தனியாக முகத்தில் தேய்க்கக் கூடாது. சந்தனம் பன்னீர் சந்தன பவுடர், பன்னீரில் குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். மூன்று மாதங்கள் இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் பருத் தொல்லையே இருக்காது. சந்தனக் கட்டையை பன்னீர் விட்டு அரைத்து முகத்தில் தடவினால், பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் மறையும். பன்னீர் ரோஜா மொட்டுக்களை எடுத்து, அது நனையும் அளவு சூடான தண்ணீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அந்த நீரை வடிகட்டி முகத்தில் பூசி அரைமணி நேரம் ஊறிய பின் துடைத்து எடுக்கவும். கொழுந்து வேப்பிலை வேப்பிலை சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. கொழுந்து வேப்பிலையை தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும். முகத்திற்கு மஞ்சள் பூசுவதை முடிந்த வரை தவிர்த்து விடுங்கள். இப்போதைய மஞ்சளில் அதிக அளவு இரசாயனத் தன்மை இருக்கிறது. அது பலரது முகத்திற்கும் ஒத்துக் கொள்ளாததாக இருக்கிறது. சோற்றுக் கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. அவற்றின் நடுவில் இருக்கும் பசையை எடுத்து, அதில் சம அளவு நீரைக் கலந்து முகத்தில் தடவிவர பருவுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஒரு ஸ்பூன் அருகம்புல் பொடியும், குப்பமேனி இலைப் பொடியும் குளிர்ந்த நீரில் கலந்து பருக்களில் போடலாம். இது சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. இது பருவை குணமாக்கும். வெள்ளைப்பூண்டு வெள்ளைப் பூண்டினை எடுத்து அதன் தோலை உரித்தபின்னர் முகப்பரு உள்ள இடத்தில் வைத்து தேய்க்கவும். தினசரி பத்து நிமிடம் தேய்க்க முகப்பரு மறையும். ஆப்பிள் பப்பாளி பப்பாளிச் சாற்றினை முகத்தில் பூசி வர பருவுக்கு இயற்கையான சிகிச்சை கிடைக்கும். ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து அதில் ஒரு டீஸ் பூன் தேன் கலந்து முகத்தில் பூசி வர பரு மறையும். வாரம் இருமுறை முகத்தில் அப்ளை செய்யவேண்டும். உணவுக்கட்டுப்பாடு பெண்களின் அழகான கன்னங்களுக்கு அவ்வப்போது அச்சுறுத்தலாகத் தோன்றுவது முகப்பருக்கள். பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும். பொடுகுத் தொல்லை, ஹார்மோன் பிரச்னை, நகத்தினை வளர்த்தல், முறையற்ற உணவுப் பழக்கம், உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். தலையணை உறை, சோப், டவல் போன்றவைகளை தனித்தனியாக ஒவ்வொருவரும் வைத்து தங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் ஒருவர் பயன்படுத்தும் இத்தகைய பொருட்களை இன்னொருவர் பயன்படுத்தும் போது அவருக்கும் இது பரவக்கூடும். குளிப்பதற்கும் சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் நிறைய பருக வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். இப்படியெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு வரலாம். உடற்பயிற்சி அவசியம் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது வெளியேறும் வியர்வையினால், துவாரங்களில் உள்ள அழுக்கு நீக்கி பருக்கள் வராமல் தடுக்கலாம். அதுபோல முகத்தில் பருக்கள் பெருமளவு உருவாகி விட்டால் அதற்கு வெளியே கொடுக்கும் சிகிச்சை மட்டுமின்றி உள்ளேயும் சிகிச்சை அவசியமாகும். |
கர்ப்ப கால காய்ச்சல் பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும்
![]() இதற்கான ஆய்வில் பங்களாதேசை சேர்ந்த 340 கரப்பவதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். கனடாவின் மருத்துவ நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் வரைஸ் காய்ச்சலுக்கு உட்பட்டவர்கள், உட்படாதவர்கள் என 170 பேர் கொண்ட இரு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். குழந்தை பிறந்த பின்னர் அவர்களின் ஆரோக்கியம், நிறை என்பன ஆய்விற்குட்படுத்தப்பட்ட போது, காய்ச்சல் தாக்கத்திற்கு உட்படாத கர்ப்பவதிகளின் குழந்தைகள் மிகுந்த ஆரோக்கியத்தோடும் அவர்களின் நிறையின் சராசரி 3178 கிராம் ஆகவும் காணப்பட்டது. வைரஸ் காய்ச்சலுக்கு உட்பட்ட தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியம், நிறை என்பவற்றை பரிசோதித்த போது அவர்கள் ஆரோக்கியம் குன்றியவர்களாகவும் சராசரி நிறையானது 2978 கிராம்கள் ஆகவும் காணப்பட்டது. இதிலிருந்து கர்ப்பகாலத்தில் ஏற்படும் கா |
1-10 of 138