கவலை தரும் வாய் துர்நாற்றம்

posted Jan 7, 2012, 9:41 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jan 7, 2012, 9:42 AM ]
சிலர் வாய் திறந்து ஏதாவது பேசினாலே நமக்கு தலை சுற்றி மயக்கமாக வரும். ஆனால் நம் வாய் நாறுகிறதா என்று நாம் அறிய முடியாது. வாயை சுத்தமாகப் பேணாவிட்டால் வாய் துர்நாற்றம் வரும். ஆனால் இது வேறு பல நோய்களின் அடையாளமாகவும் இருக்கலாம். ஒரு சிலருக்கு உணவுகள், சுகாதாரமற்ற வாழ்க்கை முறைகளாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

முதலில் எல்லா உணவுகளும் வாயில் தான் ஜீரணத்தை தொடங்குகிறது. சில உணவுப் பொருட்கள் உதாரணமாக பூண்டில் உள்ள ஸ்மெல், உணவு ஜீரணமாகி இரத்தத்தில் உறிஞ்சப்படுவதால் பின்னர் அது நுரை ஈரலை அடைந்து மூச்சுக்காற்றில் வெளிப்படும். என்ன தான் வாய் கழுவினாலும் வியர்வையில் மூச்சில் நாற்றம் இருக்கும்.

தினமும் முறையாகப் பல் துலக்கவிட்டால் பல்லிடுக்குகள் மற்றும் ஈறுகளுக்கிடையே சிக்கிய உணவுத் துணுக்குகளில் பாக்டீரியாக்கள் பெருகி நாற்றமுள்ள வாயுக்களை வெளிவிடும். நாக்கிலும் பெருமளவு பாக்டீரியாக்கள் காணப்படும் புகைப்பிடித்தல் மற்றும் புகையிலைப் பொருட்கள் மெல்லுதல், வெற்றிலைப் பாக்கு, பான் பராக் பழக்கங்கள், பற்களில் கறை, வாய் துர்நாற்றம் ஏற்படுத்தும்.

நாக்கின் சுவை அறியும் திறன் பாதிக்கப்படும், ஈறு வலி ஏற்படும். வாய் துர்நாற்றமும் நாக்கில் சுவை குறைவும் ஈறு வியாதிகளுக்கு அடையாளம். பற்களில் கொஞ்சம் கொஞ்சமாகப் படியும் மஞ்சள் கறை ஈறுகளை பாதிக்கும். பாக்டீரியாக்கள் வெளிவிடும். அப்படியே கவனியாது விட்டால் ஈறுகளும் தாடை எலும்புகளும் சிதைவடையத் தொடங்கும்.

வாய் மற்றும் பற்குழிகளில் ஈஸ்ட் தொற்று இருந்தாலும் பற்கள் பாதிப்படையும். வாய் துர்நாற்றம் உண்டாகும். வாயில் சுரக்கும் உமிழ்நீர் வாயை எப்போதும் ஈரமாக வைத்துக் கொள்கிறது. பாக்டீரியாக்கள் வெளியிடும் அமிலங்களை சமனப்படுத்தி சுத்தப்படுத்துகிறது. இது வாய்க்குள் சேரும் இறந்த செல்களை சுத்தப்படுத்தும்.

இல்லாவிட்டல் இந்த செத்த செல்கள் அழுகி துர்நாற்றம் உண்டாக்கும். பல்வேறு மருந்துகள் உட்கொள்வதும், உமிழ் நேர் சுரப்பிக் கோளாறும், வாய்வழியாக அதிகம் சுவாசிப்பதும் வாய் உலர்வை ஏற்படுத்தி துர்நாற்றம் உண்டாக்கும். சுவாசக் குழாய் பாதிப்பு, நிமோனியா, பிராங்கைடிஸ், சைனஸ் பாதிப்பு , நீரிழிவு, எதுக்களிப்பு, ஈரல், மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தலாம்.

வாய் துர்நாற்றத்தை ஒழிக்க......

வாயை சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.முறையாக இருமுறை பல் துலக்கவும். பல் இடுக்குகளில் உள்ள உணவுத் துணுக்குகள் மஞ்சள் கறை எல்லாம் போகும் படி தரமான toothbrush மற்றும் பற்பசை உபயோகித்து மேல் கீழ் உள்ளே வெளியே, இடம் வலம் எல்லாம் நன்றாகத் துலக்கவும். நாக்கையும் சுத்தப்படுத்த மறந்து விடாதீர்கள்.

சில வேளை பல் துலக்கும் போது வாந்தி வருமானால் உப்பு அல்லது எலுமிச்சை சுவையுள்ள பற்பசை உப்யோகிக்கலாம். toothbrush 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றவும். பல் செட்டுகளை இரவில் கழற்றி எடுத்து சுத்தப்படுத்திக் காலையில் மாட்டவும். வருடத்திற்கு இரு முறையாவது பல் மருத்துவரைக் கண்டு சோதனை செய்து முறையாக பற்களை சுத்தப்படுத்தவும்.

புகையிலைப் பழக்கமிருந்தால் விட்டொழியுங்கள். தினமும் 8 லிட்டர் தண்ணீர் அருந்துங்கள். இனிப்பற்ற சுவிங்கம் மெல்லுவதும் உமிழ்நீரை அதிகம் சுரக்க வைத்து வாயை சுத்தப்படுத்தும் சளி , இருமல் போன்ற நோய் தொற்றுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும.

வாயிலுள்ள பாக்டீரியாக்களை கொல்லும் ஆன்டிசெப்டிக் மவுத் வாஷ்கள் பல மார்கெட்டில் கிடைக்கின்றன. இவ்வகை மவுத் வாஷ்கள் உணவை செரிக்க உதவும். சிலவேளை சில நல்ல பாக்டீரியாக்களையும் அழித்து விடும். எனவே மருத்துவரின் ஆலோசனைப் படி உபயோகிக்கலாம்.