![]() எண்ணெய்ப் பசை, ஈரப்பசை இல்லாத வறண்ட உணவுப் பொருட்களை சாப்பிடக்கூடாது. புளிப்பு, கார உணவையும் சாப்பிட வேண்டாம். மனதுக்குப் பிடித்த இனிப்பும், நெய்யும் கலந்த உணவை சாப்பிடலாம். ஆனால், இது பசியைத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும். இரவு சாப்பாட்டை சீக்கிரமாக முடித்து படுக்கைக்குச் சென்று விட வேண்டும். ஒவ்வொரு மாதமும் என்னென்ன சாப்பிடலாம்? * முதல் மாதத்தில் சத்துள்ள உணவோடு, காலை, மாலை என இருவேளைகளில் காய்ச்சிய பாலை பருக வேண்டும். * இரண்டாவது மாதத்தில், பாலில் சுத்தம் செய்த உலர் திராட்சைகளைப் போட்டுக் காய்ச்சிக் குடிக்க வேண்டும். * மூன்றாவது மாதத்தில், காய்ச்சிய பாலோடு சிறிது நெய், சில துளிகள் தேன் கலந்து குடிக்க வேண்டும். * நான்காவது மாதத்தில், கரு தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்வதால், தாய்க்கு உடல் பாரம் அதிகமாக இருக்கும். அப்போது, ஒரு டம்ளர் பாலுக்கு 12 கிராம் என்ற அளவில் காய்ச்சிய பாலில் வெண்ணை கலந்து குடிக்க வேண்டும். * ஐந்தாவது மாத்தில் இருந்து ஏழாவது மாதம் வரை உப்பு, கொழுப்பு, குறைவான இனிப்பு நிறைந்த சத்தான உணவு சாப்பிட வேண்டும். * காலை, மாலை என இருவேளைகளிலும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடலாம். வெறும் நெய் சாப்பிட முடியாதவர்கள் பத்து உலர் திராட்சைகளை அதில் கலந்து சாப்பிடலாம். * ஒன்பதாவது மாதம் பால் கஞ்சியில் நெய் கலந்து குடிக்க வேண்டும். முதல் மாதத்திலிருந்து ஒன்பதாவது மாதம் வரை இதேப் போல் சாப்பிட்டு வந்தால், கர்ப்பிணிக்கு கருத்தரித்த காலத்தில் கருப்பை, வயிறு, இடுப்பு, முதுகு ஆகிய பகுதிகள் மென்மையாக இருக்கும். இந்த உணவு முறை, ஆயுர்வேதம் சார்ந்தது ஆகும். |
மருத்துவம் >