உதட்டை பராமரிக்க

posted Nov 19, 2011, 9:25 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Nov 19, 2011, 9:25 AM ]
இன்றைய இளம் பெண்கள் சிலருக்கும் உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தம் கசியும்.  பின் படிப்படியாக உதடுகள் கறுப்பானதாக மாறிவிடும். இதற்கு மிக முக்கிய காரணம் உடலில் அதிக உஷ்ணம் இருப்பதுதான்.  
 
இந்த உஷ்ணத்தை போக்க வெந்தயத்தை ஒரு ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்துவிடவேண்டும்.
 
இரவில் படுக்க போகும் போது வெண்ணையை உதட்டில் தடவிக் கொள்ள வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உதடு மீண்டும் பழைய பொலிவுக்கு வந்து விடும்