ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூக்கள் என்பார்கள். இலுப்பை பூக்கள் அந்த
அளவிற்கு இனிப்புத்தன்மை கொண்டவை. இலுப்பைப்பூ பச்சையாகச் சாப்பிட ருசியாக
இருக்கும். இலுப்பைப்பூவைக் காயவைத்து பலவகையான பலகாரங்களைச் செய்யலாம்.
இலுப்பை எண்ணெய் ஏழைகளின் நெய் எணப்படுகிறது. இது சமையலில்
உபயோகப்படுத்தப்படுகிறது. இந்தபூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களைக்
கொண்டுள்ளன. ரத்த விருத்தி மருந்து இலுப்பைப்பூக்கள் மனிதருக்கும், கால்நடைகளுக்கும், ரத்த விருத்தி மருந்தாகப் பயன்படுகிறது. இலுப்பைப்பூக்களை குடிநீரில் போட்டு காய்ச்சி குடிக்க இருமல், காய்ச்சல், நீர் வேட்கைப் போகும். மூச்சிரைப்பு நீங்கும் இரைப்பு ஏற்படும் சமயங்களில் இலுப்பைப் பூவை பால்விட்டு அரைத்து பாலில் கலக்கிக் கொடுக்க இரைப்பு நீங்கும். காய்ந்த பூவை வதக்கி வீக்கங்களுக்கு ஒத்தடமிட அந்த இடத்தில் வியர்வை தோன்றி வீக்கம் குறையும். வயதானவர்களுக்கு கால்களில் அரிப்பும், புண்ணும் தோன்றலாம். அவர்கள் இலுப்பைப்பூ கசாயத்தை புண்களில் தடவிவர அரிப்பு நீங்கும். புண்கள் ஆறும். |
மருத்துவம் >