மென்மையான உதடுகள் வேணுமா?

posted Feb 8, 2012, 10:26 AM by Sathiyaraj Thambiaiyah
முகத்திற்கு அழகு தருபவை உதடுகள். பனிக்காலத்தில் அவை வறண்டு வெடித்து விடும். எனவே மென்மையான, சிவந்த நிறமுடைய உதடுகளைப் பெற அழகியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகளைக் கேளுங்கள்.

உதடுகள் உலராமல் இருக்க

உதடுகள் உலாராமல் இருக்க முதலில் மாய்ஸ்சுரைஸரைத் பூசி அதன் பிறகு மேட் லிப்ஸ்டிக் தடவ வேண்டும். உதடுகளின் வெளிப்புறத்தை லிப் பென்ஸிலால் வரைந்துவிட்டு க்ரீம் லிப்ஸ்டிக்கைத் தடவினால் உதட்டைவிட்டு வெளியே வராது.

மென்மையான உதடுகள்

மென்மையான உதடுகளின் ரகசியம் ஈரப்பதம். நெய், வாசலீன் ஆகியவற்றை தடவுவதால் உதடுகளில் வெடிப்பு வருவதை தவிர்க்கலாம். உதடுகள் உலர்ந்துவிட்டதைப் போல் தோன்றினால் கன்டிஷனர் தடவலாம்.

லிப் கிளாஸ்

லிப் கிளாஸ் பளபளப்பானது, அதே நேரத்தில் மிகக் குறைந்த அளவில் நிறத்தை தரக் கூடியது. லேசான நிறம் பெற சிறந்தது. இதனைத் தடவினால் இயற்கையிலேயே ஈர உதடுகளைப்போல காட்சியளிக்கும். ஆனால் இது நீண்டநேரம் நீடிக்காது.

பீட்ரூட் சாறு

உதடுகளுக்கு இயற்கையிலேயே இளஞ்சிவப்பு நிறத்தைப் பெற இரவு உறங்கும் முன் முன் பீட்ரூட் சாறு தடவவும். மென்மையான, ரோஜா நிற இதழ்களைப் பெற கொத்தமல்லிச் சாறால் உங்கள் உதடுகளை அவ்வப்போது `மசாஜ்' செய்யுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் உதடுகள் படிப்படியாக சிவப்பாக மாறும்.

இரவு படுக்கும் முன் இரண்டு துளிகள் ஆலிவ் ஆயில் உதட்டின் மீது தடவி வர காலையில் மென்மையான உதடுகளை காணலாம்.

பாலாடையுடன் தேன் கலந்து அந்த கலவையில் உதட்டில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைத்து கழுவினால் உதடுகள் மென்மையாகும்.

தண்ணீர் அவசியம்

தினசரி 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் அருந்துவது உடலின் ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு உதடுகள் வறட்சியடையாமல் பாதுகாக்கும்.
Comments