முருங்கை கீரையின் உடல் நலக் குணம்

posted Oct 21, 2011, 10:52 AM by Sathiyaraj Kathiramalai
முருங்கை கீரை நிறைய நோய்களுக்கு மருந்தளிக்க கூடிய தன்மை கொண்டது. அந்தவகையில் முருங்கை கீரையால் உட்சூடு,மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய்,கண்ணோய் போன்ற நோய்கள் நீங்கும்.
முருங்கை இலையை சமைத்து சாப்பிட்டால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமாகும் . முருங்கை கீரையில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் கல்சியம் உள்ளது எனவே இதை சாப்பிட்டால் இரத்த சோகை நோய் நீங்கும். உடல் மெலிவாக இருப்பவர்கள் வாரம் இரண்டு முறை முருங்கை கீரையை உண்டு வந்தால் உடல்-தேறும். முருங்கை இலையில் வைட்டமின் A, B, C கால்ஷியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. ஒரு கோப்பை முருங்கை சாறில் 9முட்டை அல்லது அரைக்கிலோ வெண்ணை அல்லது 8கோப்பை பாலில் அடங்கி இருக்கும் வைட்டமின் A உள்ளது. வயிற்று புண்ணை ஆற்றும். அஜீரண கோளாறுகளை போக்கி மலச்சிக்கலை நீக்கும் . இரத்தத்தில் கலந்து இருக்கும் தேவையில்லாத நீர்களை பிரித்து வெளியேற்றும். நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு போன்ற வற்றை  போக்கும். சிறுநீரை பெருக்குவதால் உயர் ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் பக்க விளைவு ஏற்படுத்தும் மாத்திரைகளை தினமும் எடுத்து கொள்வதிலிருந்து தப்பிக்கலாம். உடல் சூட்டை குறைக்கும் ,கண் பார்வை நரம்புகள் வலுப்பெறும். பித்தத்தை குறைக்கும். இளநரையை நீக்கும் உடல் சருமத்தை பளபளக்க செய்யும். தாய்ப்பாலை அதிகமாக ஊறவைக்கும். வாரம் இரண்டு முறை பெண்கள் கண்டிப்பாக முருங்கை கீரையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.