பொ‌ன்னா‌ங்க‌ண்‌ணி‌க் ‌கீரை‌யின் மருத்துவக் குணம்

posted Dec 7, 2011, 8:53 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Dec 7, 2011, 8:55 AM ]
பொ‌ன்னா‌ங்க‌ண்‌ணி‌க் ‌கீரை‌யி‌ல் ‌வை‌ட்ட‌மி‌ன் ஏ ‌நிறை‌ந்து‌ள்ளது. அதோடு ம‌ட்டும‌ல்லாம‌ல் த‌ங்க‌ச்ச‌த்து, இரு‌ம்பு‌ச் ச‌த்து ஆ‌கியவையு‌ம் உ‌ள்ளது. வார‌த்‌தி‌ல் ஒரு நாளாவது பொ‌ன்னா‌ங்க‌ண்‌ணி‌க் ‌கீரையை சமை‌த்து சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தாலே அ‌திலு‌ள்ள பல‌ன்க‌ள் நமது உடலு‌க்கு‌க் ‌கி‌ட்டு‌ம்.பொ‌ன்னா‌ங்க‌ண்‌ணி‌க் ‌கீரையை நா‌ம் உண‌வி‌ல் அ‌வ்வ‌ப்போது சே‌ர்‌த்து வ‌ந்தா‌ல் க‌ண்களு‌க்கு ந‌ல்லது. பா‌ர்வை‌க் குறைபாடுக‌ள் கூட தொட‌ர்‌ந்து பொ‌ன்னா‌ங்க‌ண்‌ணி‌க் ‌கீரையை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் ‌ச‌ரியா‌கி‌விடு‌ம்.
மேலு‌ம், பொ‌ன்னா‌ங்க‌ண்‌ணி‌க் ‌கீரையை அடி‌க்கடி உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர உடலானது த‌ங்க‌ம் போ‌ன்ற ‌மினு‌மினு‌ப்பு பெறு‌ம். ‌சி‌றிய வ‌ய‌திலேயே முதுமையான தோ‌ற்ற‌ம் பெ‌ற்றவ‌ர்க‌ள் பொ‌ன்னா‌ங்க‌ண்‌ணியை சா‌ப்‌பி‌ட்டு வர ந‌ல்ல மா‌ற்ற‌ம் ‌பெறலா‌ம்.
மூல நோ‌ய் உ‌ள்ளவ‌ர்க‌ளு‌ம், உட‌ல் சூடு கொ‌ண்டவ‌ர்களு‌ம் பொ‌ன்னா‌ங்க‌ண்‌ணி‌க் ‌கீரையை வார‌த்‌தி‌ல் ஒரு நாளாவது சமை‌த்து சா‌ப்‌பி‌ட்டு வர ‌பிர‌ச்‌சினை குறையு‌ம்.