ஆப்ரிக்கா நாடுகளில் உள்ள மக்களுக்கு ஒருவகை கிருமி தொற்றால் தூக்க நோய் ஏற்படுகிறது. இந்த நோய் தாக்கியர்கள் இறந்து போகும் அபாயமும் உண்டு. மேலும் இவர்கள் வழக்கத்தை விட அளவுக்கு அதிகமாக தூங்குவார்கள். இந்த நோயை குணப்படுத்த இதுவரையிலும் எவ்வித மருந்தும் கண்டுபிடிக்கவில்லை. எனவே தற்போது இந்த வகை நோயை ஒரு வகை பக்டீரியா மூலம் குணப்படுத்தி விடலாம் என்று பெல்ஜியம் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உடலில் உள்ள நன்மை பயக்கும் பக்டீரியாக்களில் இருந்து மரபணு மாற்றப்பட்ட புதிய பக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர். இந்த பக்டீரியாக்களை உடலில் செலுத்தினால் தூக்க நோயை குணப்படுத்தி விடலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். |
மருத்துவம் >