விக்கல் ஏன் ஏற்படுகிறது?

posted Nov 24, 2011, 7:36 AM by Sathiyaraj Kathiramalai
மூச்சுக் காற்றை உள்ளிழுக்கும் போது நம் மார்புக் கூடு விரிய வேண்டும். இதற்கு துணை புரிய வெளிய மார்புத் தசைகள் சுருங்க, உதரவிதானம் சுருங்கி கீழிறங்க நுரையீரல்கள் இரண்டும் விரியும். அப்போது நுரையீரல்களில் காற்றின் அழுத்தம் குறைவதால் வெளிக்காற்று குரல் நாண்களை நன்றாகத் திறந்துகொண்டு மூச்சுக் குழாய் வழியாக நுரையீரல்களுக்கும் நுழையும். இது இயல்பாக நிகழும் நிகழ்வு.  சில சயமங்களில் மார்புத் தசைகள் போதுமான அளவிற்கு சுருங்காது. உதரவிதானம் சரியாக கீழிறங்காது. குரல் நாண்கள் நன்றாகத் திறக்காது. இம்மாதிரி சமயங்களில் மூச்சுப் பாதையின் மிகக் குறுகிய இடைவெளியில் மூச்சுக்காற்று நுரையீரலுக்குள் நுழை வேண்டும். அப்போது ஒருவித விநோத ஒலி உண்டாகும். அதுதான் விக்கல்.  சாதாரணமாக நாம் அளவிற்கு மீறி அல்லது அவசரமாக உணவு உட்கொண்டால் விக்கல் வரும். தேவையான அளவிற்குத் தண்ணீர் குடிக்காத போதும் விக்கல் வருவதுண்டு. அதேசமயம், சிறுநீரகக் கோளாறுகள், கல்லீரல் நோய்கள், மூளைக் காய்ச்சல், நீரிழிவு நோய், குடல் அடைப்பு போன்றவற்றின் அறிகுறியாகவும் விக்கல் வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முறையான மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.