5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வழிகாட்டி கருத்தரங்கு

posted Jul 22, 2012, 9:58 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Jul 23, 2012, 5:12 AM ]
வீரமுனை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலை பழைய மாணவர்கள் சங்கத்தினால், வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் அனுசரணையுடன் 2012 ஆம் ஆண்டு 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களின் நன்மை கருதிய பரீட்சை வழிகாட்டி கருத்தரங்கானது இன்று (22.07.2012) வீரமுனை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலையில் இடம்பெற்றது. வீரமுனை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலை மாணவர்களோடு அண்மைய கிராமங்களான கோரக்கர் கோவில், வீரச்சோலை போன்ற கிராமங்களிருந்தும் மாணவர்கள் கலந்துகொண்டனர். இதேவேளை மல்வத்தை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி, கணபதிபுரம் போன்ற கிராமங்களில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை இணைத்து மல்வத்தை விபுலாந்தா வித்தியாலயத்தில் கடந்த (15.07.2012) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.