1990.08.12 அன்று வீரமுனை சிந்தாயாத்திரைபிள்ளையார் ஆலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த அப்பாவி பொது மக்கள் மீது இனவெறியர்கள் நடத்திய தாக்குதலினால் கொல்லப்படவர்களின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிகப்பட்டது. இதன்போது வீரமுனை சிந்தாயாத்திரைபிள்ளையார் ஆலயத்தில் பகல் விஷேட பூசை இடம்பெற்றதுடன் அன்னதான வைபபமும் இடம்பெற்றது. மேலும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டதோடு கடந்த வருடம் புதிதாக அமைக்கப்பட்ட நினைவு தூபிக்கு கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் மலர் மாலை செலுத்தி அஞ்சலி செலுத்தினர். மாலை 06.00 மணிக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது. |
நிகழ்வுகள் >