2012ம் ஆண்டில் வரும் கிரகப் பெயர்ச்சிகள்,சுப முகூர்தங்கள்,இந்து பண்டிகைகள்

posted Jan 5, 2012, 9:02 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jan 5, 2012, 9:52 AM ]
கிரகப் பெயர்ச்சியினால் குறிப்பிட்ட ராசி மற்றும் நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்களுக்கு நன்மை, தீமைகள் ஏற்படுகிறது. குரு, ராகு, கேது பெயர்ச்சிகளின் போது அதற்காக சிறப்பு பூஜைகளும், வழிப்பாடுகளும் நடத்தப்படுவது வழக்கம்.

2012ம் ஆண்டு நிகழும் கிரகப் பெயர்ச்சிகள்:


குருபெயர்ச்சி:

நந்தன வருஷம் வைகாசி மாதம் 4ம் தேதி (17-05- 2012) வியாழக்கிழமை குருபகவான் 3.01 நாழிகைக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம்பெயர்கிறார்.

ராகு கேது பெயர்ச்சி:

நந்தன வருஷம் கார்த்திகை மாதம் 17ம் தேதி (02-12-2012) ஞாயிறுக்கிழமை ராகு பகவான் 11.31 நாழிகைக்கு விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும், கேது பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம்பெயர்கின்றனர்.

அக்னி நட்சத்திரம்:

நந்தன வருஷம் சித்திரை மாதம் 22ம் தேதி (04-05-2012) வெள்ளிக்கிழமை 2.33 நாழிகைக்கு அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து, வைகாசி மாதம் 15ம் தேதி (28-05-2012) திங்கட்கிழமை 20.16 நாழிகைக்கு நிவர்த்தி அடைகின்றது.2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அதிகளவில் சுப முகூர்த்த தினங்கள் வருகின்றன.

பொதுவாக சுப முகூர்த்த நாட்களில் செய்யப்படும் காரியங்களால் நன்மை பெருகும் என்பது ஐதீகம். அதனால் திருமணம், காது குத்து, கடை திறப்பு, தொழில் தொடக்கம் உள்ளிட்டவை சுப முகூர்த்த தினங்களில் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு (2012) ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 13 சுபமுகர்த்த நாட்கள் வருகின்றன.


2012ம் ஆண்டுக்கான சுப முகூர்த்த தினங்கள்:

ஜனவரி - 12, 19, 20, 30.

பிப்ரவரி - 06, 09, 12, 13, 17, 19, 20, 24, 26.

மார்ச் - 04, 05, 07, 11, 12, 14, 18, 21, 25.

ஏப்ரல் - 08, 12, 15, 16, 19, 25.

மே - 04, 07, 11, 16, 17, 18, 23, 25, 31.

ஜூன் - 01, 06, 07, 08, 10, 11, 14, 15, 18, 21, 29.

ஜூலை - 05, 08, 15, 30.

ஆகஸ்ட் - 01, 03, 06, 12, 13, 15, 16, 20, 22, 23, 27, 29, 30.

செப்டம்பர் - 02, 03, 12, 19, 21, 26, 27, 28.

அக்டோபர் - 10, 14, 18, 28.

நவம்பர் - 05, 11, 12, 15, 18, 19, 23, 26, 30.

டிசம்பர் - 03, 05, 09, 10, 12, 19, 23, 30, 31.2012ம் ஆண்டில் வரும் இந்து பண்டிகைகள்

இந்த ஆண்டின் (2012) முதல் மாதமான ஜனவரியில் மட்டும் 7 இந்து பண்டிகைகள் வருகின்றன. இந்த ஆண்டின் முதல் இந்து பண்டிகையான வைகுண்ட ஏகாதசி இன்று கொண்டாடப்படுகிறது. கடைசி இந்து பண்டிகையாக டிசம்பர் மாதம் 18ம் தேதி நகரத்தார் பிள்ளையார் நோன்பு வருகின்றது.

2012ம் ஆண்டின் இந்து பண்டிகைகள்:

ஜனவரி 05 (வியாழன்) வைகுண்ட ஏகாதசி

ஜனவரி 08 (ஞாயிறு) ஆருத்ரா தரிசனம்

ஜனவரி 13 (வெள்ளி) போகிப் பண்டிகை

ஜனவரி 14 (சனி) பொங்கல்

ஜனவரி 15 (திங்கள்) மாட்டுப் பொங்கல்

ஜனவரி 16 (செவ்வாய்) காணும் பொங்கல்

ஜனவரி 22 (ஞாயிறு) தை அமாவாசை

பிப்ரவரி 01 (புதன்) தை கிருத்திகை

பிப்ரவரி 07 (செவ்வாய்) தைப் பூசம்

பிப்ரவரி 20 (திங்கள்) மகா சிவராத்திரி

பிப்ரவரி 21 (செவ்வாய்) மயானக் கொள்ளை

மார்ச் 07 (புதன்) மாசிமகம் - ஹோலிப் பண்டிகை

மார்ச் 14 (புதன்) காரடையார் நோன்பு

மார்ச் 23 (வெள்ளி) யுகாதி பண்டிகை - தெலுங்கு வருடப்பிறப்பு

மார்ச் 31 (சனி) ஸ்ரீராமநவமி

ஏப்ரல் 05 (வியாழன்) பங்குனி உத்திரம்

ஏப்ரல் 13 (வெள்ளி) சித்திரை மாதப்பிறப்பு

ஏப்ரல் 24 (செவ்வாய்) அட்ஷய திரிதியை

ஏப்ரல் 26 (வியாழன்) ஸ்ரீசங்கரர் ஜெயந்தி

ஏப்ரல் 27 (வெள்ளி) ஸ்ரீராமானுஜர் ஜெயந்தி

மே 02 (புதன்) மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்

மே 04 (வெள்ளி) அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

மே 06 (ஞாயிறு) மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல்

மே 28 (திங்கள்) அக்னி நட்சத்திரம் நிவர்த்தி

ஜூன் 03 (ஞாயிறு) வைகாசி விசாகம்

ஜூன் 26 (செவ்வாய்) ஆனித் திருமஞ்சனம்

ஜூன் 18 (புதன்) ஆடி அமாவாசை

ஜூன் 22 (ஞாயிறு) நாகசதுர்த்தி

ஜூன் 23 (திங்கள்) ஆடிப்பூரம்

ஜூலை 27 (வெள்ளி) ஸ்ரீவரலட்சுமி விரதம்

ஆகஸ்ட் 02 (வியாழன்) காய்த்ரி ஜெபம் - 18ம் பெருக்கு

ஆகஸ்ட் 05 (ஞாயிறு) மகா சங்கடஹர சதுர்த்தி

ஆகஸ்ட் 09 (வியாழன்) ஸ்ரீகோகுலாஷ்டமி

ஆகஸ்ட் 29 (புதன்) ஓணம் பண்டிகை

செப்டம்பர் 19 (புதன்) ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி

செப்டம்பர் 20 (வியாழன்) ரிஷி பஞ்சமி

செப்டம்பர் 26 (புதன்) வாமன ஜெயந்தி

செப்டம்பர் 29 (சனி) உமாமகேஸ்வர விரதம்

அக்டோபர் 23 (செவ்வாய்) மகா நவமி- சரஸ்வதி பூஜை - ஆயுத பூஜை

அக்டோபர் 24 (புதன்) விஜயதசமி

அக்டோபர் 29 (திங்கள்) மகா அன்னாபிஷேகம்

நவம்பர் 13 (செவ்வாய்) தீபாவளி பண்டிகை - லட்சுமி குபேர பூஜை

நவம்பர் 15 (வியாழன்) கடைமுகம்

நவம்பர் 17 (சனி) நாக சதுர்த்தி

நவம்பர் 18 (ஞாயிறு) கந்தசஷ்டி - சூரசம்ஹாரம்

நவம்பர் 25 (ஞாயிறு) சாதுர் மாத விரத பூர்த்தி

நவம்பர் 27 (செவ்வாய்) திருகார்த்திகை - அண்ணாமலையார் தீபம்

டிசம்பர் 16 (ஞாயிறு) தனுர் மாத பூஜை ஆரம்பம்

டிசம்பர் 18 (செவ்வாய்) நகரத்தார் பிள்ளையார் நோன்பு
Comments