2014 ஆம் ஆண்டுக்கான பிரதீப பிரபா விருதிற்கு தெரிவான ஆசிரியர்

posted Oct 16, 2014, 9:37 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Oct 16, 2014, 9:41 AM ]
2014 ஆம் ஆண்டுக்கான "குரு பிரதீப பிரபா" விருது வழங்கும் நிகழ்வு கடந்த 06.10.2014 மகரகம தேசிய கல்வி நிறுவகத்தில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் நடைபெற்றது. இவ் விருதினை வீரமுனையை சேர்ந்த கல்முனை பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் உதயகுமார் திலகவதி ஆசிரியை அவர்களும் பெற்றுக்கொண்டார். அவர்களுக்கு எமது இணையக்குழு சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.