1990ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி வீரமுனை சிந்தாயாத்திரைபிள்ளையார் ஆலயம், இராம கிருஷ்ண மிஷன் பாடசாலை ஆகியவற்றில் தஞ்சமடைந்திருந்த 55 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் 22 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அமைதியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு ஸ்ரீசிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசைகள் இடம்பெற்றதோடு ஆலயத்திற்கு அருகாமையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு பொதுமக்களால் ஒளியேற்றப்பட்டு கொல்லப்பட்டவர்களுக்கு நினைவுகூரப்பட்டது. |
நிகழ்வுகள் >