அமரர் காசுபதியின் நினைவாக வீரமுனை இணையத்தள குழுவின்(Web Team) அனுசரணையில் அசத்தல் அணியினால் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாம் நாளாகிய இன்று(11/09/2010) முதல் சுற்று போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்திருக்கின்றது. அந்த வகையில் ஆறு அணிகள்(மிலேனியம்,காயத்திரி.அசத்தல்,சுப்பர் கிங்ஸ்,லக்கி,லெவன் ஸ்டார்) பங்கு பற்றிய இச் சுற்றுப்போட்டியில் அசத்தல், சுப்பர் கிங்ஸ், லக்கி, காயத்திரி ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.நாளைய தினம் இரண்டு அரையிறுதி போட்டிகளும் நடைபெறவுள்ளன. இதில் முதலாவது அரையிறுதி போட்டியில் காயத்திரி மற்றும் லக்கி அணியினருக்கான போட்டி பி.ப 02.00 மணியளவில் இடம்பெறயிருக்கின்ற அதே வேளை பி.ப 04.00 மணியளவில் சுப்பர் கிங்ஸ் மற்றும் அசத்தல் அணியினருக்குமான இரண்டாவது அரை இறுதிப் போட்டி இடம்பெற இருக்கின்றது. இன்று இடம்பெற்ற போட்டிகளின் போதான காட்சிகள். |
நிகழ்வுகள் >