நட்புறவு கிரிக்கெட் போட்டி

posted May 27, 2012, 10:28 AM by Sathiyaraj Kathiramalai   [ updated May 27, 2012, 11:11 AM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனை அறிவுச்சுரங்கம் கல்வியகமும் மல்வத்தை எவரெஸ்ட் கல்வியகமும் இணைந்து தமது கல்வி நிலையங்களில் கல்வி பயிலும் மாணவரிடையே நட்புறவை ஏற்படுத்தும் முகமாக கிரிக்கெட் போட்டி ஒன்றை நடாத்தினர். இப் போட்டியானது மல்வத்தை விபுலானந்தா மைதானத்தில் நேற்று (26.05.2012) காலை 9.00 மணியளவில் நடைபெற்றது. இதில் அறிவுச்சுரங்க கல்வியக மாணவர்கள் சார்பான அணியினர் 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர். நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற மல்வத்தை எவரெஸ்ட் கல்வியக சார்பான மாணவர்கள் அணியினர் முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தனர். இதன் படி அறிவுச் சுரங்க கல்வியக சார்பான மாணவர்கள் அணியினர் 12 ஓவர்களில் சகல விக்கெற்றும் வீழ்த்தப்பட்ட நிலையில் 66 ஓட்டங்களை பெற்றனர். 67 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மல்வத்தை எவரெஸ்ட் கல்வியக சார்பான மாணவர்கள் அணி 10 ஓவரில் சகல விக்கெட்டும் இழந்து 49 ஓட்டத்தை மாத்திரம் பெற்று 16 ஓட்டங்கள் தோல்வியை தழுவியது. போட்டியின் சிறப்பாட்டக்காறராக அறிவுச்சுரங்க கல்வியக மாணவர் நிசங்க தெரிவு செய்யப்பட்டார்.
Comments