கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தினால் வளத்தாப்பிட்டியில் அமைந்துள்ள வில்லுக் குளத்தின் அணைக்கட்டில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் மல்வத்தை, மல்கைத்தீவு போன்ற கிராமங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இக் குளக் கட்டு உடைந்ததன் வாயிலாக நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற் காணிகள் பாதிப்புக்குள்ளாகியது. சேனநாயக்க குளத்தில் இருந்து வெளியேற்றப்படும் மேலதிக நீர் இக் குளத்தினையே சென்றடைகின்றது. மேலும் அதிகளவான மக்கள் இக் குளத்தில் மீன் பிடிப்பதனையே தனது ஜீவனோபாய தொழிலாக மேற்கொண்டு வந்தனர். அதிலும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அப் பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அப்பகுதி வயற் காணிகளுக்கு இக் குளத்திலிருந்தே நீர் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இக் குளக்கட்டின் உடைப்பானது திருத்தப்படாதவிடத்து பெரும்போக நெற் செய்கை என்பது கேள்விக்கிடமாகும். மேலும் குளக்கட்டில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக குளத்து மீன்கள் வெளியேறியமையால் அதிகமான மீனவர்கள் அங்கு சென்று மீன் பிடிப்பதனையும் காணலாம். |
நிகழ்வுகள் >