அமரர் காசுபதி அவர்களின் ஞாபகார்த்தமாக வீரமுனை இணையத்தள குழுவின்(Web Team) அனுசரணையில்அசத்தல் அணியினர் நடாத்தும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியானது இன்று (10.09.2010) காலை 8.30 மணியளவில் வீரமுனை ஆர்.கே.எம் வித்தியாலய மைதானத்தில் ஆரம்ப நிகழ்வுகளுடன் ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வுகளில் அன்னாரின் குடும்பத்தினரும், வீரமுனை ஆர்.கே.எம் வித்தியாலய அதிபர் சந்திரமோகன், விநாயகர் விளையாட்டு கழக தலைவர் மற்றும் இணையத்தள குழுவினரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இச் சுற்றுப் போட்டியில் வீரமுனையை கழகத்தை சேர்ந்த ஆறு அணிகள் பங்குபற்றுகின்றன. இச் சுற்றுப் போட்டியில் இறுதிப் போட்டி தவிர்ந்த அனைத்து முதல் சுற்று, அரையிறுதி போட்டி என்பன நாளை மற்றும் நாளை மறு தினம் நடை பெறவிருக்கின்றது. |
நிகழ்வுகள் >