கண்ணீர் அஞ்சலி

posted Aug 8, 2010, 1:43 AM by Ponnampalam Thusanth   [ updated Aug 12, 2010, 12:16 AM by Sathiyaraj Thambiaiyah ]

நெஞ்சத்தில் நிறைந்த எங்கள்
நிர்மலத் தெய்வ மப்பா
வஞ்சனை உன்னிடத்தில்
வந்ததைக் கண்டறியோம்
கொஞ்சமும் உன்னிடத்தில்
கோபத்தைப் பார்த்த தில்லை
நெஞ்சமே தாங்கவில்லை
நின்னுயிர் பிரிந்த தெண்ணி

உன் மனைவி பிள்ளைகளுடன்
உறவினர்கள் புடைசூழ!
பின்னிப் பிணைந்தோர்கள்
பிரியமும் கொண்டோர்கள்
உன் பிரிவுத் துயரத்தில்
உருத்துகின்றார்கள் கண்ணீரை
சின்னக் குறையேதும் செய்யாத தெய்வம் - நீ
சென்றுவர உந்தனுக்கு விடைகள் பல நூறு

காலன் துரத்தியதால்
கண்ட பெயர் ப்ரசரப்பா
ஞாலத்தில் ஒளி விளக்காய்
நாளெல்லாம் நீ வாழ
பூவுலகத் தெய்வத்தை
பூண்டுமக்கு வேண்டுகிறோம்
வேலன் துணை உண்டு
வேண்டுமிடம் நீ செல்ல
ஓம் சாந்தி ! சாந்தி !! சாந்தி !!!


(நல்லடக்கம்:- 2010.08.09 காலை 10:00 மணிக்கு
வீரமுனை இந்து மயானத்தில் இடம் பெறும்)