கண்ணீர் அஞ்சலி

posted Jan 18, 2011, 11:10 PM by Sathiyaraj Kathiramalai   [ updated Jan 21, 2011, 12:23 AM by Sathiyaraj Thambiaiyah ]
அமரர்.சதாசிவம் சங்கரலிங்கம்

   மலர்வு: 1948.03.30                                                                         உதிர்வு: 18.01.2011

சதாசிவம் சங்கரலிங்கம் நேற்று 2011.01.18 ஆம் திகதி காலமானார், அன்னார் காலம்சென்ற சதாசிவம்கண்ணகை தம்பதியரின் அன்பு மகனும், தங்கரெத்தினத்தின் பாசமிகு கணவனும், பரமன், சாந்தன், கமலன், சிவா அஜந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

மண்ணிலே மாசற நின்ற - உன்
மாண்பினை கண்ட இறைவன்
விண்ணிற்கு வாரும் என்று கூறி
விரைந்து அனுப்பினானோ காலனை
எண்ணில்லா புகழ் கொண்ட எங்கள் தந்தையே

எங்கையா நீயும் சென்றாய் - இங்கே
கூக்குரல் இட்டு நிக்கும் உன் குடும்பத்தைப்பார்
குற்றுயிராய் கிடக்கும் எங்களைப்பார்
பற்று எதனை ஐயா செய்வோம்
மனமும் தீயினால் வெந்ததையா

சற்றும் குறைவு படாமல் நீயும்
சர்வேசன் அடியில் இடம் கொண்டாய்
முற்றாக உன்னுயிரை இழந்தாலும்
எந்தைக்கும் மறவேம் ஐயா
 எங்கள் மீது நீ கொண்ட அன்பினை தானே ஐயா.

இணையக்குழு (Web Team) சார்பான எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.