அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக கரையோரத்தின் தாழ்நிலங்கள் பலவற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீரமுனை பிரதேசத்தில் மக்களின் குடியிருப்புகள் சில வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் பல வீதிகளும், வயல் நிலங்களும் வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து மழை நீடித்தால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும் நிலை ஏற்படும். வீரமுனை-வெல்லாவெளி பிரதான வீதி, வீரமுனை-அம்பாறை வீதியின் வளத்தாப்பிட்டி பகுதியில் வீதியின் மேலாக சில இடங்களில் வெள்ளநீர் பாய்ந்து செல்கின்றன. அத்துடன், கல்முனை - அம்பாறை பிரதான வீதியின் மாவடிப்பள்ளி தாம்போதியின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. |
நிகழ்வுகள் >