ஊருக்குள் காட்டு யானைகளின் ஊடுருவல்

posted Mar 25, 2013, 6:54 PM by Sathiyaraj Kathiramalai   [ updated Mar 25, 2013, 6:59 PM ]
நேற்றைய தினம் அதிகாலை அளவில் வீரமுனையின் சில பிரதேசங்களில் காட்டு யானை ஒன்று ஊடுருவி பல வீட்டு தோட்டங்களை சேதமாக்கியுள்ளது. இதனால் தென்னை, வாழை போன்ற பயிர்கள் அழிக்கப்பட்டுள்ளதோடு பலரின் பாதுகாப்பு வேலி, சுற்று மதில்கள் என்பனவும் சேதமாக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இவ் யானை நடமாட்டம் அதிகமாக இருந்த போதும் அரசாங்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதமையையிட்டு மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.