2015.01.31 இன்று சனிக்கிழமை காலை 8.30 இற்கு வீரமுனை சேர் அருளம்பலம் கல்வியகத்தின் ஆங்கில "Elocution” வகுப்புகள் ஆரம்ப நிகழ்வு நிறுவனத்தின் ஸ்தாபர்களில் ஒருவரான திரு.சுப்பிரமணியம் சுதேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றன. பிரதம அதிதியாக ஆங்கில ஆசிரியை திருமதி லக்சாந்தி செல்வராசா அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தார். சம்மாந்துறை பிரதேச செயலக சிறுவர் உளவளத்துணை ஆலோசனை உதவியாளர் அருளானந்தம் சுதர்சன் அவர்களும் சிறப்புரையாற்றினார். மல்வத்தை, வீரச்சோலை, வீரமுனை கிராமங்களின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். |
நிகழ்வுகள் >