அம்பாறை மாவட்ட விபுலானந்தா புனர்வாழ்வு கழகம் (லண்டன் கிளை) வீரமுனை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள், அப்பியாசக் கொப்பிகள் மற்றும் பாடசாலை பைகளை வழங்கி வைத்தனர். மேற்படி நிகழ்வானது இ.கி.மி பாடசாலை ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட விபுலானந்தா புனர்வாழ்வு கழக தலைவர் Dr.பெரியசாமி (லண்டன்) செயலாளர் K.செல்வராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் போது புத்தகங்கள், அப்பியாசக் கொப்பிகள் மற்றும் பாடசாலை பைகளை கொண்ட 160 பொதிகளை மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர். |
நிகழ்வுகள் >