கடந்த ஒரு மாத காலமாக ஏற்பட்ட அசாதாரண கால நிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் வீரமுனையின் பல பிரதேசங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியது. வெள்ள நீர் வீடுகளுக்குள் உட்புகுந்ததனால் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்து தற்காலிகமாக வீரமுனை இராம கிருஷ்ண மிசன் பாடசாலை மற்றும் சம்மாந்துறை சபூர் வித்தியாலயம் போன்றவற்றில் தற்காலிகமாக தஞ்சமடைந்திருந்தனர். ஆனால் நாளைய தினம் இப்பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்படவுள்ளதால் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். வெள்ள நீர் வீடுகளிலிருந்து முற்றாக வடியாத காரணத்தினால் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் வீதி ஓரங்களில் தற்காலிகமான கொட்டகை அமைத்தும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர். |
நிகழ்வுகள் >