வீரமுனையில் கமநெகும வேலைத்திட்டம்-2010

posted Aug 1, 2010, 1:20 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Aug 1, 2010, 1:32 AM by Sathiyaraj Thambiaiyah ]
சம்மாந்துறைப் பிரதேச செயலகத்துகுட்பட்ட வீரமுனை கிராமத்தில் வீரமுனை-01, வீரமுனை-02, வீரமுனை-03 கிராம சேவகர் பிரிவுகளில் இவ்வாண்டு கமநெகும வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் வீரமுனை-01 இற்கு ரூபா 10 இலட்சம் செலவில் பழைய பாடசாலை வீதிக்கு கொங்கிறிட் இடப்படுகிறது. இவ்வேலையினை வீரமுனை-01 கிராம அபிவிருத்திச் சங்கம் நடைமுறைப்படுத்துகிறது.


வீரமுனை-02 இற்கு ரூபா 10 இலட்சம் செலவில் தபாலக வீதியானது கொங்கிறிட் இடப்படுகிறது. இவ்வேலையினை வீரமுனை-02 கிராம அபிவிருத்திச் சங்கம் நடைமுறைப்படுத்துகிறது.


வீரமுனை-03 இற்கு ரூபா 10 இலட்சம் செலவில் வழிப்பாட்டுப் பிள்ளையார் வீதிக்கு வடிகான் இடப்பட்டு கொங்கிறிட் வீதியும் இடப்படுகிறது. இவ்வேலையினை வீரமுனை-03 புகழேந்தி சமுர்த்தி சங்கம் நடைமுறைப்படுத்துகிறது.மேலும் இவ்வேலையானது 20% மக்கள் பங்களிப்புடன் செயற்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும். இருந்த போதிலும் வீரமுனை-04 பிரிவிற்கு இதுவரைக்கும் கமநெகும வேலைத்திட்டத்தின் முலம் எதுவித அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.