கிரீஸ் மனிதனின் கைவரிசை இன்று சம்மாந்துறை பிரதேசத்தில்

posted Aug 11, 2011, 11:04 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Aug 11, 2011, 11:58 AM ]
சம்மாந்துறை கோரக்கர் கோயில் தமிழ் பிரதேசத்தில்இன்று (11.08.2011) இரவு சுமார் 07.30 மணியளவில் இளம் யுவதியொருவர் குளித்துக் கொண்டிருந்த வேளை மர்ம மனிதனின் கைவரிசையைக் காட்ட முற்பட்டுள்ளார். இருளில் இருந்தவாறு கையை எட்டிப் பிடித்த வேளையில் அக் குறித்த யுவதி கையை தட்டிவிட்டு கூச்சலிட்டதை தொடர்ந்து அந்நபர் தப்பிச் சென்றுள்ளார். இதன் போது யுவதியின் கையில் சிறு கீறல் ஏற்பட்டுள்ளது. மர்ம மனிதன் தொடர்பில் சம்மாந்துறை போலீசாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. கட்டுப்படுத்துவதற்காக போலீசார் சத்த வேட்டுக்களும், கண்ணீர் புகைப் பிரயோகமும் மேற்கொண்டதோடு, நிலைமையை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்மாந்துறை மற்றும் அதனை அண்டிய பிரதேச மக்கள் பீதியிலும், பெண்கள் அச்சத்துடனும் உள்ளனர். 

இலங்கையை கடந்த ஒரு ஒரு வாரமாகக் கலக்கி வரும் ஒரு விடயமா கிறீஸ் மனிதன்/மனிதர் என்று சொல்லப் படும் மர்ம மனிதர் விவகாரம்.திடீர் திடீரென இலங்கையில் குறித்த சில பகுதிகளில் தோன்றும் மர்ம மனிதர்கள் பற்றிய பரபரப்பு ஒரே குழப்பமாக இருக்கிறது. முதலில் இலங்கையின் தென் கிழக்குப் பிராந்தியத்தின் சில ஊர்களில் இந்த மர்ம மனிதர்கள் பரவலாகப் பல்வேறு இடங்களில் திடீர் திடீரென வந்து பரபரப்பை ஊட்டியதாகக் கதைகள் பரவின.அம்பாறை மாவட்டத்தின் பல ஊர்களிலும் இவ்வாறு மர்ம மனிதர்கள் வந்துபோனதாகவும் செய்திகள் வந்தவண்ணமே உள்ளன.

மேலும் சில நாட்களாக மலையகப் பகுதிகளில் தொர்ந்து இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதாக செய்திகள் வர ஆரம்பித்துள்ளது. லிந்துல, நுவர எலியா, பத்தன, ஹட்டன், தலவாக்கலை, கொடைகளை, பதுளை என்று பல்வேறு இடங்களிலும் கிறீஸ் மனிதர்களின் நடமாட்டம் பற்றி செய்திகள் வந்துகொண்டே இருந்தன. (சிங்களத்தில் கிறீஸ் யக்கா - பே என்று அழைக்கிறார்கள்) உடல் முழுதும் கிறீஸ் (grease) பூசிக்கொண்டு நடமாடும் மனிதர்கள் கறுப்பு நிற ஆடை அணிந்து முகத்தையும் மறைத்துக் கொண்டு கையில் கத்தி போன்ற கூரிய ஆயுதங்களுடன் தாக்குவதாகத் தான் செய்திகள். இந்தத் தாக்குதல் அனைத்துமே பெண்களுக்கு எதிராகவே நடந்திருக்கின்றன.