இல்ல விளையாட்டுப் போட்டி நான்காம் நாள் நிகழ்வுகள்

posted Mar 8, 2012, 9:51 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Mar 8, 2012, 9:52 AM ]
வீரமுனை இராம கிருஷ்ணா மிஷன் பாடசாலையில் 2012 ஆம் ஆண்டின் இல்லங்களுக்கிடையான விளையாட்டுப் போட்டியின் முன்றாம் நாள் நிகழ்வாக இல்லங்களிற்கு இடையிலான கிரிகட் சுற்றுப்போட்டி 06/03/2012 அன்று இடம்பெற்றது. இதில் கம்பர் இல்லம் 1ம் இடத்தையும் வள்ளுவர் 2ம் இடத்தையும் இளங்கோ 3ம் இடத்தையும் பெற்றுக்கொண்டது. இதனை தொடர்ந்து நான்காம் நாளான இன்று(08/03/2012) சுவட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன் அடிப்படையில் வள்ளுவர் 1ம் இடத்திலும் இளங்கோ 2ம் இடத்திலும் கம்பர் 3ம் இடத்திலும் உள்ளன. நாளைய தினம் 2 மணியளவில் இறுதி நாள் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெறவுள்ளன.Comments