இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள்

posted Mar 10, 2012, 3:29 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Mar 10, 2012, 3:30 AM ]
வீரமுனை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலையில் 2012 ஆம் ஆண்டின் இல்லங்களுக்கிடையான விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நாள் நிகழ்வுகள் நேற்று (09/03/2012) பாடசாலை அதிபர் S.சந்திரமோகன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ S.பபுஸ்பராஜா அவர்களும், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் A.M.M.நௌஷாட் அவர்களும், வலயக்கல்வி சுகாதார பாட ஆசிரிய ஆலோசகர் மற்றும் கிராம உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வானது இதில்  இளங்கோ இல்லம் 1ம் இடத்தையும்  கம்பர் இல்லம் 2ம் இடத்தையும்  வள்ளுவர் இல்லம் 3ம் இடத்தையும் பெற்றுக்கொண்டன. வெளி மாணவர்களுக்கான 4x100m ஓட்ட நிகழ்வில் அசத்தல் அணியினர் வெற்றியீட்டினர்.