வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று(28.06.2011) செவ்வாய்க்கிழமை வெகுவிமர்சையாக கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.இன்று காலை விசேட யாக பூஜையுடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவத்தில் மூலமூர்த்தி மற்றும் பரிபால மூர்த்திக்கு விசேட அபிஷேகம் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து கொடியேற்ற சீலைக்கு விசேட பூசைகள் இடம்பெற்றதுடன் அவற்றை பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக தம்பத்தடிக்கு கொண்டுசெல்லப்பட்டது.அத்துடன் தம்பபூஜை இடம்பெற்றதுடன் கொடியேற்றம் சிறப்பாக இடம்பெற்றது.அதனைத்தொடர்ந்து தம்பத்துக்கு விசேட அபிசேகம் செய்யப்பட்டு விசேட பூசையும் இடம்பெற்றது. கொடியேற்ற பூசையினை தொடர்ந்து வசந்தமண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் விநாயக பெருமானுக்கும் வள்ளி தேவசேன சமேத முருகப்பெருமானுக்கும் விசேட பூசைகள் இடம்பெற்றதுடன் சுவாமி உள்வீதி திரு உலாவும் இடம்பெற்றது. இதனையடுத்து அடியார்களுக்கான மகேஸ்சுர பூசையும் வெகுசிறப்பாக இடம்பெற்றது. இதன்போது இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு வழிபாடுகள் மேற்கொண்டனர். |
நிகழ்வுகள் >