மகா கும்பாபிஷேக பெருவிழா

posted Jun 6, 2010, 10:49 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jun 6, 2010, 10:59 PM ]

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்

கிழக்கு வாழ் சைவப் பெருங் குடி மக்களுக்கு அன்பு கலந்த வணக்கங்கள்.மேற்கே மருத நிலமும் வடக்கே நெய்தல் நிலமும் சூழ்ந்த இயற்கை வனப்பு நிறைந்த ஈழத் திருநாட்டின் அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மணம் வீசும் வீரமுனைப் பதியிலே சீர்பாத தேவி கண்டெத்த சிவக்கொழுந்தாய் நாடி வரும் அடியார்களுக்கு வேண்டும் வரம் அருளும் வீரமுனை ஸ்ரீ சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெரு விழா

கிழக்கு மாகாணத்தில் 32 வருடங்களுக்குப் பின் 2வது தடைவையாக 33குண்டலங்கள் அமைத்து செய்யப்படுகின்ற மிகப் பிரமாண்டமான கும்பாவிஷேகமானது மே மாதம் 28ம் திகதி முதல் கிரிகைள் ஆரம்பிக்கப்பட்டு யூன் மாதம் 1ம்,2ம் திகதிகளில் அடியார்கள் எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகம்வும் இடம் பெற்று யூன் மாதம் 3ம் திகதி மஹா கும்பாவிஷேகம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூசைகள் இடம் பெறும் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
 
இப் பிரமாண்டமான கும்பாபிஷேகமானது ‘சர்வதேச இந்து மத குரு பீடாதிபதி ,சிவாகம விசாரத், சபரிமலைக் குருஜி, சபரிமலை ஸ்ரீ சாஸ்த்தா பீடாதிபதி ஆன்மீக அருள் ஜோதி ஸ்ரீ ஐப்பதாச சாம்பசிவ சிவாச்சாரியார் மற்றம் சர்வதேச இந்த மத யாழ் மாவட்ட தலைவர் சிவாகம அனுசாரித சார்தூல பிரதிஸ்டா ரெத்தினம் சிவாகம கலாநிதி சிவ பிரம்ம ஸ்ரீ சிவா நித்தியானந்த சிவாச்சாரியார் தலைமையில் இனிதே நடை பெறும்.

வருடாந்த ஆனி உத்தர மகோற்சவம் இடம் பெறும். அதாவது எதிர் வரும் 10.06.2010 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக வசந்த மண்டப சிறப்பு பூசைகள் இடம் பெற்று 16.06.2010 அன்று வேட்டைத் திருவிழாவும் 17 ம் திகதி இரவு 7.00மணிக்கு சப்பிரத் திருவழாவும் 18.06. 2010அன்று எம்பெருமான் அடியார்களுக்கு சித்திரத் தேரில் ஏறி அருள்பாலிக்கின்ற அற்புத நிகழ்வும் இடம் பெற இருக்கின்றது என்பதனை அறியத் தருகின்றோம்.
சீர்பாத குலத்தின் பெருமையை பார் எங்கும் எடுத்தியம்பும் இவ்வாலயமானது கடந்த 2008 ஆண்டு 22 அடி சித்தித் தேரிலே எம் பெருமான் வெள்ளோட்டம் கண்டதோடு கடந்த வருடம் புதிதாக அமைக்கப்பட்ட தீர்த்தக் கேணியில் தீர்த்தம் ஆடினார். எனவே ஆனை முகத்தான் அடியவர்களே அனைத்த அம்சங்களும் ஒருங்கே அமையப் பெற்ற ஸ்ரீ சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலயம் வந்து முந்து வினை போக்கி வாழ்வில் முத்தி தனைப் பெறுவீராக!
கும்பாபிஷேகத்தினைத் தொடர்ந்து வரும் மண்டலாபிஷேக பூசையில் 10.06.2010 அன்று முதல் 19.06.2010 வரை வீரமுனை ஸ்ரீ சிந்தத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த ஆனி உத்தர மகோற்சவம் இடம் பெறும். அதாவது எதிர் வரும் 10.06.2010 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக வசந்த மண்டப சிறப்பு பூசைகள் இடம் பெற்று 16.06.2010 அன்று வேட்டைத் திருவிழாவும் 17 ம் திகதி இரவு 7.00மணிக்கு சப்பிரத் திருவழாவும் 18.06. 2010அன்று எம்பெருமான் அடியார்களுக்கு சித்திரத் தேரில் ஏறி அருள்பாலிக்கின்ற அற்புத நிகழ்வும் இடம் பெற இருக்கின்றது என்பதனை அறியத் தருகின்றோம்.