மேற்படி வீரமுனை சீர்பாத தேவி சிறுவர் இல்லத்தில் இன்று(28..08.2011) காலை 10.15 மணிக்கு கல்முனை லயன்ஸ்(Lions Club) கழகத்தினரின் நிதி உதவியுடன் இல்ல சிறார்களுக்காக போஷாக்கு உணவு வழங்கும் திட்மொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கல்முனை Lions கழக தலைவரும் வீரமுனையின் மூத்த சமூக சேவையாளருமாகிய திரு.கே.பொன்னம்பலம் (கிராம நிருவாக உத்தியோகத்தர் நாவிதன்வெளி) தலைமையிலான Lions கழக குழாமினர் கலந்துகொண்டனர். இந்த சத்து உணவுத்திட்டத்தின் கீழ் மாணவர்களது போஷாக்கினை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தினம் தோறும் பசுப்பால் வழங்கப்படவுள்ளது. ![]() ![]() ![]() ![]() ![]() |
நிகழ்வுகள் >