வீரமுனையை சேர்ந்த மதனசேகரம் தம்பிஐயா இலங்கை தபால் திணைக்களத்தின் கிழக்கு மாகாண பிரதேச நிர்வாக உத்தியோகஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமது கடமைகளை நேற்ற வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு பிரதி தபால் மா அதிபர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். ![]() இவர் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, அக்கரைப்பற்று, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய தபால் அத்தியட்சகர் அலுவலக பிரிவுகளுக்கான நுண்ணாய்வு பரிசோதகராக கடமையாற்றி வந்துள்ள நிலையிலேயே இந்நியமணம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 1981ம் ஆண்டு தபாலதிபராக இணைந்து கொண்ட இவர் சம்மாந்துறை, கல்முனை ஆகிய தபாலகங்களின் பிரதம தபால் அதிபராகவும் 1994ஆம் ஆண்டுகளில் மட்டக்களப்பு தபாலதிபர்கள் பயிற்சிக் கல்லூரியின் போதனாசிரியராக கடமையாற்றியுள்ளார். இவர் ஒரு உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரியாவார். |
நிகழ்வுகள் >