விளையாட்டு விழா-2010

posted Jun 6, 2010, 10:39 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jun 6, 2010, 10:45 PM ]

தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டும் விளையாட்டு கழகத்தின் 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் எமது விநாயகர் விளையாட்டு கழகத்தினால் வீரமுனை இராமகிருஸ்ண மகா வித்தியாலயத்தில் 17.04.2010 சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணி நடாத்தப்பட்ட மாபெரும் விளையாட்டு நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக கௌரவ.ஜனாப்.யு.மன்சூர் (பிரதேச செயலாளர்) அவர்களும் விசேட அதிதிகளாக திரு.எஸ்.சந்திரமோன் (அதிபர்) , திரு .கே .கோவிந்தசாமி (கிராமசேவகர்) , திரு.சோ.சத்தியநாதன் (தொழிலதிபர்) ,திரு.சிவஸ்ரீ.கு.நிமலேஸ்வர குருக்கள் (ஆலய பிரதம குரு) ஆகியோரும் கலந்துகொண்டனர். இதில் மரதனோட்டம், கிரிக்கட், வலைப்பந்தாட்டம், சறுக்கு மரம் ஏறல், போன்ற முக்கிய நிகழ்ச்சிகளும் சிறுவர்களுக்கான ஆமை ஓட்டம், பலூன் உடைத்தல், முட்டி உடைத்தல், போன்ற பல நிகழ்சிகளும் நாடாதப்பட்டது.இதன் இடம்பெற்ற கிரிக்கட் சுற்றுபோட்டியில் எமது அசத்தல் அணி வெற்றி கிண்ணத்தை பெற்றுக்கொண்டது.