வீரமுனை மாணவிகள் சாதாரண தர பரீட்சையில் சாதனை

posted Apr 11, 2014, 8:44 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Apr 12, 2014, 9:28 AM ]
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட வீரமுனை இராம கிருஸ்ண மகா வித்தியாலய மாணவிகள் வெளியாகியுள்ள கா.பொ.த.சாதாரண தர பரீட்சையில் இரண்டு மாணவிகள் ஒன்பது ஏ சித்திகளை பெற்று பாடசாலைக்கும் பிரதேசத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

அத்துடன் மூன்று மாணவிகள் எட்டு ஏ சித்திகளையும் ஒரு மாணவி ஆறு பாடங்களில் ஏ சித்திகளையும் பெற்று இந்த சாதனைக்கு வலு சேர்த்துள்ளனர். சம்மாந்துறை கல்வி வலயத்தில் பின்தங்கிய பாடசாலையான வீரமுனை இராம கிருஸ்ண மகா வித்தியாலய மாணவிகள் நிலை நாட்டியுள்ளமை கல்வியியலாளர்கள் மத்தியில் பெரும் பாராட்டினைப்பெற்றுகொடுத்துள்ளது. கலவன் பாடசாலையாக உள்ளபோதும் மாணவிகளை இந்த சாதனைகளை படைத்துள்ளனர்.

இதன்படி ஜெகநாதன் அர்ச்சனா, சிசுபாலன் டிசானி ஆகியோர் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளனர். இதேபோன்று யோகநாதன் லோஜிதா எட்டு ஏ யும் ஒரு பியும் பெற்றுள்ளதுடன் விநாயகமூர்த்தி தட்சாயினி எட்டு ஏ யும் ஒரு பியும் நவரெட்ணம் யோபிதா எட்டு ஏ யும் ஒரு சீ யும் பெற்றள்ளனர். அத்துடன் கணேசமூர்த்தி சனுஜா ஆறு பாடங்களில் ஏ சித்திகளையும் மூன்று பி சித்திகளையும் பெற்றுள்ளனர்.


பாடசாலை வரலாற்றில் பெரும் சாதனைகளை படைத்துள்ள இந்த மாணவர்களுக்கு எமது இணையக்குழு சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.