வீரமுனை மக்களின் ஜீவனோபாய தொழிலாகிய வேளாண்மைச் செய்கையின் பெரும் போகத்திற்கான அறுபடை தற்போது ஆரம்பமாகியுள்ளது. இவ் அறுபடையானது நெல்லிக்காடு, சேனக்காடு, கிடாவட்டை, வீரச்சோலை, போன்ற பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இம் முறை போதியளவு விளைச்சலை எதிர்பார்க்க முடியாது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். ஏனெனில் புதிய வகையான சப்பி போன்ற நோய்களின் தாக்கமே காரணம் என்கின்றனர். மேலும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நெல்லின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக இம் முறை பெரும் போகத்தில் பெரும்பாலும் நஷ்டத்தை எதிர் நோக்க வேண்டி வரும் என கவலை தெரிவிக்கின்றனர். இம்முறை அதிகமான விவசாயிகள் அதிக விலை கொடுத்து குத்தகைக்கு நெற்காணிகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். |
நிகழ்வுகள் >