ஜோஹெனிடர் சர்வதேச நிறுவனத்தின் பிரதான அனுசரணையுடன் இலங்கை சென் ஜோன் அம்புலன்ஸ் நிறுவனத்தினால் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்கும் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது. அம்பாறை மாவட்டத்தில் சென் ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் சிறிலங்காவினால் 08 பிரதேச செயலகப்பிரிவுகளில் சிறுவர் அபிவிருத்தி சம்பந்தமான செயலமர்வுகளை நடாத்துவதில் முதல் கட்டமாக சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் நடைபெறுவது பாராட்டத்தக்கதாகும். இதன் ஒரு கட்ட செயலமர்வு வீரமுனை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை (28.11.2014) இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது சிறுவர்களின் முக்கியத்துவம், உரிமைகள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் சம்பந்தமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. |
நிகழ்வுகள் >