வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பீப்பிள் சல்வேசன் போரம் நிறுவனத்தினால் உதவி

posted Jan 19, 2011, 8:21 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jan 19, 2011, 9:00 AM ]
வீரமுனையை சேர்ந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், குழந்தைகளுக்கு இன்று (19.01.2011) உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனமான பீப்பிள் சல்வேசன் போரம். சுவிட்சிலாந்து அன்பர்கள் இணைந்து குழந்தைகளுக்கான பால்மா பக்கட்கள், பிஸ்கட்களையும் மற்றும் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களையும் வழங்கினர். இந்நிகழ்வில் அமைப்பின் தலைவர் கலாநிதி எஸ். கணேஸ் அவர்கள், அமைப்பின் நிருவாக உறுப்பினர்கள், வீரமுனை கிராம நிலதாரிகள் மற்றும் வீரமுனை இணையதளக்குளுவினர்கள் கலந்துகொண்டதுடன் இணையக்குளுவின் செயலாளர் திரு. கே. சத்தியராஜ் அவர்கள் ஆரம்ப உரையை ஆற்றியதோடு இவ் அமைப்பின் தலைவர் கலாநிதி எஸ். கணேஸ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.இவ் வெள்ள அனத்தத்தினால் சிறுவர்கள் உளத்தாக்கதிற்க்கு உட்பட்டிரூந்தனர் எனவே அவர்களது உளத்தினை விருத்திசெய்யும் நோக்கில் இப் பாடசாலை உபகரணங்கள் 
வழங்கப்பட்டது.
மேலும் இணையக்குளுவின்(Web Team) அழைப்பினை ஏற்று வருகை தந்து எம்முறவுகளுக்கு உதவி செய்தமைக்கு இணையாதளக்குலுவின் சார்பாகவும் வீரமுனை மக்கள் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.