சக்தி விதங்களில் ஒன்றான நவராத்திரி விரதம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மற்றும் அக்டோம்பர் மாதங்களில் சக்தியை போற்றும் விதமாக நவராத்திரிவிழா கொண்டாப்பட்டு வருகிறது. இந்த 9 நாட்களிலும் இரவு நேரத்தில் துர்கையை வழிபடுகின்றனர். இந்த வழிபாட்டில் அலைமகள்,மலைமகள்,கலைமகள் ஆகிய மூவரின் முன்னிலையில் தான் 9 நாட்களிலும் விரதம் மேற்கொள்கின்றனர். விரதம் மேற்கொள்ளும் போது மனிதர்களின் தீய குணங்களான வெறுப்பு,பொறாமை,அறியாமை,பேராசை,போன்ற அனைத்து குணங்களையும் மனதில் இருந்து நீக்கி விட வேண்டும். குறிப்பாக சரஸ்வதி பூசை பாடசாலை, அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், வேலை தளங்கள் என பல்வேறு இடங்களில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. அதிலும் 9ம் நாள் ஆயுத பூசை அநேகமாக கொண்டாடப்படுகின்றது. இம் முறையும் வீரமுனை ஆர். கே. எம் பாடசாலை மாணவர்களால் சரஸ்வதி பூசை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இறுதி மூன்று நாட்களும் கல்வியை கொடுக்கின்ற சரஸ்வதிக்கு என்பதால் சிறப்பாக கொண்டாடப்பட்டன. அதிலும் விஜயதசமி அன்று கலை நிகழ்ச்சி, ஏடு தொடங்குதல் , தீர்த்தம் என்பன சிறப்பாக இடம்பெற்றது. photo by Kirishnapillai Sutharsan |
நிகழ்வுகள் >