நாடெங்கிலும் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பாடசாலைகளில் நுளம்புகளை கட்டுப்படுத்தும் வகையில் விசேட நடவடிக்கைகள் இன்று நாடெங்கிலும் நடத்தப்பட்டுவருகின்றன. இதன்கீழ் சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் சிரமதானம் மூலம் துப்புரவுசெய்யப்பட்டன. சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட வீரமுனை இராம கிருஸ்ண வித்தியாலயத்தில் மாபெரும் சிரமதான நிகழ்வு இன்று (30/01/2015) மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர் ச.ரகுநாதன் தலைமையில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் இந்த சிரமதான நிகழ்வில் கலந்துகொண்டனர். இதன்போது பாடசாலையின் சூழலில் நுளம்பு பெருக்கத்துக்கு ஏதுவான பகுதிகளில் துப்புரவுசெய்யப்பட்டன. |
நிகழ்வுகள் >