வரலாற்று சிறப்புமிக்க வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அஷ்ரோபந்தன மகா சங்காபிஷேகம் இன்று (09/06/2012) சனிக்கிழமை வெகுவிமர்சையாக இடம்பெற்றது.இன்று காலை சங்காபிஷேகத்துக்கென விசேடமாக அமைக்கப்பட்ட பந்தலில் விநாயகபெருமான் எழுந்தருளச்செய்யப்பட்டு விசேட பூசைகள் இடம்பெற்றன.மகா மண்டபத்தில் 1008 எட்டு சங்குகள் அடுக்கப்பட்டு கும்பங்கள் வைக்கப்பட்டு அவற்றுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டதுடன் விசேட யாக பூசையும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து பூசைசெய்யப்பட்ட பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்தியாகிய சீர்பாததேவியினால் பிரதிஸ்டை செய்யப்பட்ட விநாயகப்பெருமானுக்கு அபிஷேகம்செய்யப்பட்டது.அதனைத்தொடர்ந்து சங்காபிஷேகம்செய்யப்பட்டதுடன் விநாயகப்பெருமான் உள் வீதி வலம் வந்து அடியார்களுக்கு காட்சி வழங்கினார். Photos By: Krishanapillai Sutharsan |
நிகழ்வுகள் >